பாலக் பனீர் ரோல்
உட்பொருட்கள்:
1 கப் கோதுமை மாவு
கீரை - 1 கப்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப
சீரகத் தூள் - ¼ டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் - ¼ டீஸ்பூன்
கரம் மசாலா - ½ டீஸ்பூன்
வெங்காயம் - 1 கப்
சீஸ் - 1 க்யூப்
பனீர் - 150 கிராம்
தக்காளி ப்யூரி - 1 கப்
ஊட்ட மதிப்பு:
எனர்ஜி: 400 கிலோகலோரி
புரதம்: 53 கிராம்
முறை:
கீரை சப்பாத்தி செய்ய
- கீரையை ஆவியில் வேக வைத்து ப்யூரி தயாரிக்கவும்
- 1 கப் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளவும். அதில் தண்ணீர் மற்றும் கீரை ப்யூரியை சேர்க்கவும். ருசிக்கு ஏற்ப உப்பு, ½ டீஸ்பூன் சீரகத்தூள் சேர்க்கவும். மிருதுவான மாவை தயாரிக்க 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.
- மாவை மூடி வைத்து 10 நிமிடங்கள் ஊறவிடவும்.
- இப்போது மீண்டும் மாவை பிசைந்து 5 சம பாகங்களாக பிரிக்கவும்.
- பூரிக்கட்டையை பயன்படுத்தி ஒவ்வொரு மாவு உருண்டையையும் வட்டமாக இடவும்.
- வெளிர் பழுப்பு நிற புள்ளிகள் இருபுறமும் தோன்றும் வரை ஃபுல்காவை சுடவும்.
- பனீர் ஸ்டப்பிங் செய்ய
- ஒரு வாணலியில் எண்ணெய், சீரகம் சேர்த்து ½ கப் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- அதனுடன் தக்காளி ப்யூரி சேர்த்து 5-7 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- பிறகு உப்பு, சிவப்பு மிளகாய், கரம் மசாலா மற்றும் துருவிய பனீரை சேர்க்கவும். நன்றாக கலந்துவிட்டு இந்த ஸ்டஃப்பிங்கை ஓரமாக வைக்கவும்.
- அசெம்பிள் செய்தல்
- 1 கீரை சப்பாத்தியை எடுத்து, பனீர் ஸ்டஃப்பிங்கை தடவி, அதன் மேல் அப்ப துருவிய சீஸ் மற்றும் வெங்காயத்தை சேர்க்கவும்.
- சில்வர் ஃபாயிலை பயன்படுத்தி சப்பாத்தியை உருட்டி சூடாக பரிமாறவும்.