Humrahi

கொண்டைக் கடலை கியூசடில்லா

உட்பொருட்கள்:

  • வேகவைத்த கொண்டைக் கடலை - 30 கிராம்
  • 1 முட்டை [ஆம்லெட்] -20 கிராம்
  • துண்டாக்கிய சீஸ் - 15 கிராம்
  • 1 கோதுமை டார்டில்லா / சப்பாத்தி - 20 கிராம்
  • குடைமிளகாய்-20
  • குடைமிளகாய்-20
  • கேரட் - 20 கிராம்
  • கொத்தமல்லி இலை - 5 கிராம்
  • பச்சை மிளகாய் 1
  • பூண்டு - 2 பற்கள்
  • மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  • உப்பு - சுவைக்கு ஏற்பு
  • எண்ணெய் - 5 கிராம்
  •  

ஊட்ட மதிப்பு:

எனர்ஜி: 296.32 கிலோகலோரி
புரதம்: 14.46 கிராம்

முறை:

  • வாணலியில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். ஒளிகசிகிற மாதிரி நிறம் மாறும் வரை வதக்கவும்.
  • இப்போது நறுக்கிய மற்ற அனைத்து காய்கறிகளையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  • அதனுடன் வேகவைத்து நசுக்கிய கொண்டைக் கடலை மற்றும் அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்கவும். அதை 1-2 நிமிடங்கள் சமைக்கவும்.
  • ஒரு முழு கோதுமை சப்பாத்தி/டார்ட்டில்லாவை எடுத்து, அதை முட்டையுடன் அடுக்கி, பின்னர் அதில் கொண்டைக் கடலை நசுக்கி செய்த மசாலாவை பரத்தி தடவி, அதன் மேல் சிறிது சீஸை துருவிபோடவும். 
  • இப்போது டார்ட்டில்லாவை மடித்து இருபுறமும் மிருதுவாகும் வரை வறுக்கவும் மற்றும் சூடாக பரிமாறவும்.

நீங்கள் விரும்பலாம்