Humrahi

ஆரோக்கியமான டாலியா & பருப்பு கிச்சடி

உட்பொருட்கள்:

டாலியா: 30 கிராம்
பச்சை பாசிப் பருப்பு: 15 கிராம்
மஞ்சள் பாசிப் பருப்பு: 15 கிராம்
தக்காளி: 20 கிராம்
வெங்காயம்: 20 கிராம்
பட்டாணி: 10 கிராம்
எண்ணெய் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள்தூள் - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு

ஊட்ட மதிப்பு:

ஆற்றல்: 240 கி.கலோரி
புரதம்: 11.2 கிராம்

முறை:

  • பருப்பையும் டாலியாவையும் 1 கப் நீரில் 10-15 நிமிடங்கள் ஊர வைத்து பின்னர் வடித்து விடுங்கள்.
  • ஒரு பிரஷர் குக்கரில், எண்ணெய் ஊற்றி சீரகத்தைப் போட்டு பொரிய விடுங்கள்.
  • காய்கறிகளையும் நறுமணப் பொருட்களையும் சேர்த்து வேக விடுங்கள்.பின்னர் கழுவிய பருப்பு & டாலியாவைச் சேர்த்து கலக்கவும்.
  • கலவையில் 3 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் அல்லது தாலியா முழுமையாக வேகும் வரை பிரஷர் குக்கரில் வேக விடவும்.
  • ஆவி அடங்கியதும், குக்கரைத் திறந்து 1 கட்டோரி தயிர் / 1 டம்ளர் மோருடன் கிச்சடியைப் பரிமாறவும்.

நீங்கள் விரும்பலாம்