டயபடிக் நியூரோபதி என்பது நீரிழிவு நோயாளிகளின் உயர் இரத்த சர்க்கரை அளவு காரணமாக ஏற்படக்கூடிய ஒரு நரம்பு பாதிப்பு நிலை ஆகும். இது முக்கியமாக கால்கள் மற்றும் பாதங்களில் உள்ள நரம்புகளை பாதிக்கிறது என்றாலும், செரிமான அமைப்பு, சிறுநீர் பாதை, இரத்த நாளங்கள் மற்றும் இதயம் போன்ற உடலின் மற்ற பகுதிகளையும் பாதிக்கலாம். நிலையான இரத்தச் சர்க்கரை நிர்வாகமும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் டயபடிக் நியூரோபதியைத் தடுக்கவோ அல்லது அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவோ உதவும்.
டயபடிக் நியூரோபதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான பாத பராமரிப்பை பராமரிப்பது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இதனால் காயம், சிதைவு மற்றும் ஊனம் ஏறப்படும் ஆபத்து குறையும். ஒரு பாதப் பராமரிப்பு நிபுணரைக்கொண்டு அடிக்கடி பாதங்களைப் பரிசோதிப்பது, ஒவ்வொரு நாளும் தானே பாதங்களைப் பரிசோதிப்பது, பாதுகாப்பான காலணிகளை அணிவது போன்றவை பாதங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு முக்கியம். வெதுவெதுப்பான, சோப்பு நீரில் கால்களைக் கழுவுவது, நீண்ட நேரம் கால்களை நீரில் ஊறவிடுவதைத் தவிர்ப்பது, குறிப்பாக கால்விரல்களுக்கு இடையில் உள்ள பகுதியை நன்கு உலர்த்துவது ஆகியவை முக்கியமான நடைமுறைகளாகும்.
நீண்ட அல்லது தடிமனான நகங்கள் புண்கள் மற்றும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால் கால் விரல் நகங்களைப் பராமரிப்பது அவசியம். தினமும் தானே பாதங்களைச் சோதிக்கும்போது விரல்களுக்கிடையிலும் பரிசோதிக்க வேண்டும். ஏனென்றால் இப்பகுதி பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. தொற்று அல்லது கூடுதல் சேதத்தைத் தடுப்பதற்கு கொப்புளங்கள், வெட்டுக்கள், கீறல்கள், நிற மாற்றங்கள், அதிகப்படியான வறட்சி மற்றும் காலஸ்கள் அல்லது ஆணிகள் மீது கவனம் தேவை.
தங்களுடைய பாதங்களில் உணர்ச்சி குறைந்திருக்கும் நபர்களைப் பொறுத்தவரை சரியான காலணிகளைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். தவறான அளவுள்ள காலணிகளைப் பயன்படுத்துவதால் புண்கள் ஏற்படாமல் தடுக்கவும் சரியான காலணி அளவுகளை உறுதிப்படத்தவும் பாதப் பராமரிப்பு நிபுணரிடம் ஆலோசிக்கும்படி பரிந்துரைக்கப்படுகிறது. ஹீட்டிங் பேட்ஸ், கடுமையான இரசாயனங்கள், கூர்மையான கருவிகள் மற்றும் வெறுங்காலுடன் நடப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
வலி, கூச்ச உணர்வு, பலவீனம், உடல் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள், அல்லது தலைசுற்றல் மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகளுடன், பாதிக்கப்பட்ட அல்லது குணமடையாத வெட்டு அல்லது புண் இருந்தால், மருத்துவரை அணுகுவது முக்கியம்.s
2-ஆம் வகை நீரழிவு நோயைப் பொறுத்தவரை அது இருப்பது கண்டறியப்பட்டதும் மற்றும் 1-ஆம் வகை நீரழிவு நோயைப் பொறுத்தவரை அது இருப்பது கண்டறியப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னும் டயபடிக் நியூரோபதிக்கான பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்.
டயபடிக் நியூரோபதிக்கு எந்த அறியப்பட்ட குணமும் இல்லாவிட்டாலும்கூட, அது வளரும் வேகத்தைக் குறைப்பதற்கும், வலியைப் போக்குவதற்கும், சிக்கல்களைச் சமாளிப்பதற்கும் சிகிச்சைகள் உதவுகின்றன. நரம்புக் கோளாறு வளர்ச்சியடையும் வேகத்தைக் குறைக்க அல்லது தடுக்கவும், ஒட்டுமொத்த அபாயத்தைக்குறைக்கவும் இரத்தச் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது, மற்றும் சரிவிகித உணவைப் பிரித்து உண்பது ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன.
ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும், நீரிழிவு நரம்புக் கோளாறு அபாயத்தைக் குறைக்கவும், தனிநபர்கள் சரியான இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தக் கட்டுப்பாட்டைப் பராமரிக்க வேண்டும், ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்ய வேண்டும், வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும், புகைபிடிப்பதை நிறுத்த முயற்சிக்க வேண்டும்.
உடற்பயிற்சி பற்றியும் புகைபிடிப்பதை எப்படி கைவிடுவது என்பது பற்றியும், குறிப்பாக ஏற்கனவே சிக்கல்கள் அல்லது காயங்கள் இருந்தால், தனிப்பட்ட வழிகாட்டுதலுக்கு சுகாதார நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பது முக்கியம்.12,13 12,13