தினை தயிர் சாதம்
உட்பொருட்கள்:
- தினை அரிசி - 50 கிராம்
- தயிர்-100 கிராம்
- வெள்ளரிக்காய் - 20 கிராம்
- கேரட் - 20 கிராம்
- வெங்காயம் - 20 கிராம்
- கொத்தமல்லி இலை - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 5
- கடுகு - ½ டீஸ்பூன்
- மிளகாய்-1
- எண்ணெய் - 5 கிராம்
- உப்பு - சுவைக்கு ஏற்ப
ஊட்ட மதிப்பு:
எனர்ஜி: 219 கிலோகலோரி
புரதம்: 10 கிராம்
முறை:
- தினை அரிசியை கழுவி 3-4 மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஊறவைத்த தினை அரிசி மற்றும் 200 மில்லி தண்ணீரை சேர்த்து பிரஷர் குக்கரில் வைத்து மிதமான தீயில் 3 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
- தினை அரிசி வெந்ததும், தயிர் சேர்ப்பதற்கு முன் சிறிது நேரம் ஆற விடவும்.
- இப்போது சமைத்த தினையுடன் தயிர்,நறுக்கிய காய்கறிகள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
- தாளிப்பிற்காக, சூடான வாணலியில் எண்ணெய், கடுகு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். தினை தயிர் கலவையில் தாளிப்பை ஊற்றி நன்றாக கலக்கவும்.
- தினை தயிர் சாதம் பரிமாற தயாராக உள்ளது.