ஆப்பிள் தயிர் ஸ்மூத்தி
உட்பொருட்கள்:
- துண்டுகளாக நறுக்கப்பட்ட ஆப்பிள்
- ½ கப் தயிர்
- 1 டீஸ்பூன் சியா விதைகள்
ஊட்ட மதிப்பு:
எனர்ஜி: 125 கிலோகலோரி
புரதம்: 2 கிராம்
முறை:
- ½ டீஸ்பூன் சியா விதைகளை ¼ கப் தண்ணீரில் ஊற வைக்கவும். இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
- சாதாரண அளவில் ஒரு ஆப்பிளை எடுத்து நன்றாக தோலுரித்து துண்டுகளாக நறுக்கவும்
- ஒரு ஃபுட் பிராசஸரில் தயிர், நறுக்கிய ஆப்பிள் மற்றும் ஐஸை சேர்க்கவும்
- அவற்றை நன்றாக கலந்து, ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அத்துடன் இரவு ஊறவைத்த சியா விதைகளை (1/2 டீஸ்பூன்) சேர்க்கவும்.
- இதை சில்லென்று குடித்து அனுபவிக்கவும்.