ஓட்ஸ் பாசி பருப்பு சில்லா
உட்பொருட்கள்:
- பாசி பருப்பு - 1 கிண்ணி (மஞ்சள்)
- உளுத்தம் பருப்பு - ¼ கிண்ணி
- ஓட்ஸ் - ¼ கிண்ணி
- பச்சை மிளகாய் - 1
- இஞ்சியின் சிறு துண்டு
- முட்டைக்கோஸ் - ½ கிண்ணி
- கேரட் - ½ கிண்ணி
- மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
- மிளகாய் தூள் - ¼ டீஸ்பூன்
- கொத்தமல்லி இலை - 2 டீஸ்பூன் நறுக்கியது
- எண்ணெய் - வறுப்பதறகாக ¼ கப்
- தண்ணீர் - பருப்புகளை அரைக்க ¼ முதல் ½ கப் வரை
- ருசிக்கு ஏற்ப உப்பு
ஊட்ட மதிப்பு:
எனர்ஜி: 162 கிலோகலோரி
புரதம்: 7.4 கிராம்
முறை:
- பாசி பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- ஒரு மிக்ஸியில், ஊறவைத்த பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் ஓட்ஸை சேர்க்கவும். அரை-நீர்ம நிலையில் மாவை தயாரிக்க தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும். ஓரமாக வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில், துருவிய முட்டைக்கோஸ், கேரட் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். உப்பை சேர்த்து எல்லாத்தையும் கலக்கவும்
- நான்-ஸ்டிக் தவா போன்ற தோசைக்கல் மீது பாசி பருப்பு மாவை பரத்தவும். அதன் மீது முட்டைக்கோஸ் கலவையை தூவவும்.
- தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி இருபுறமும் அப்பத்தை சுடவும்.
- தானியா-புதினா சட்னியுடன் பரிமாற சுவையான பாசி பருப்பு ஓட்ஸ் சில்லா தயாராகி விட்டது.