Humrahi

கோதுமை சிக்கன் டம்ப்ளிங்ஸ்

உட்பொருட்கள்:

  • கோதுமை மாவு – 60கி
  • எண்ணெய் – 10மிலி
  • கொத்திய சிக்கன் - 100கி
  • கொத்திய வெங்காயம் – 50கி
  • குடைமிளகாய் – 50கி
  • கேரட் – 50கி
  • இஞ்சி – 5கி
  • கொத்தமல்லித்தழை – 8-10 இலைகள்
  • உப்பு – சுவைக்கேற்ப

ஊட்ட மதிப்பு:

கலோரிகள் - 563 கி கலோரி
புரதம் – 29கி

முறை:

  1. ஒரு கடாயை எடுத்து 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும் - வெங்காயம், பூண்டு, இஞ்சி, குறிப்பிட்டுள்ள காய்கறிகள் மற்றும் கொத்திய கோழி, சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  2. டம்ப்ளின்ஸில் நிரப்ப ஃபில்லிங் தயாராக உள்ளது - அதை மற்றொரு தட்டுக்கு மாற்றவும், சிறிது நேரம் வேகவைக்கவும்.
  3. இதற்கிடையில், ஒரு சிட்டிகை உப்பு, 1 தேக்கரண்டி எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து கோதுமை மாவை பிசையவும். மென்மையாக மாவை பிசைந்து தனியாக எடுத்து வைக்கவும்.
  4. மாவை 7-8 சம பாகங்களாகப் பிரித்து, சிறிய உருண்டைகளாக உருட்டவும், அதனை உருளை கொண்டு உருட்டி வட்ட வடிவமாக திரட்டவும்.
  5. நடுவில் ஒரு ஸ்பூன் ஃபில்லிங் வைக்கவும் மற்றும் அச்சு பயன்படுத்தி, டம்ப்ளிங்கை வடிவமைக்கவும் அல்லது நீங்கள் அனைத்து பக்கங்களையும் ஒன்றாக சேர்த்து அழுத்தி வடிவமைக்கலாம்.
  6. நீராவி தட்டுகளில் எண்ணெய் தடவி 20-30 நிமிடங்களுக்கு இதனை ஆவியில் வேக விடவும்.
  7. வெளி மாவு வெந்துவிட்டதா என்று பார்த்துவிட்டு சூடாக பரிமாறவும்.

You might also like