Humrahi

உங்கள் இரத்த அழுத்த அளவீடுகளைப் புரிந்துகொள்ளுதல்: அந்த எண்கள் எதைக் குறிக்கின்றன, அவை ஏன் முக்கியமானவை

உங்கள் பரிசோதனையின்போது உங்கள் மருத்துவர் ஆராயும் அந்த எண்கள் எதைக் குறிக்கின்றன என்பதை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
நல்ல உடல்நலத்தைப் பராமரிப்பதற்கும், இதய வாஸ்குலார் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் உங்கள் இரத்த அழுத்த அளவீடுகளைப் புரிந்துகொள்வது முக்கியமாகும்.

அடிப்படைகள்: சிஸ்டாலிக் மற்றும் டயாஸ்டாலிக் அழுத்தம்

  • இரத்த அழுத்தம் இரண்டு மதிப்புகளைப் பயன்படுத்தி அளவிடப்படுகிறது: சிஸ்டாலிக் அழுத்தம் (மேலே உள்ள எண்) மற்றும் டயஸ்டாலிக் அழுத்தம் (கீழே உள்ள எண்).
  • உங்கள் இதயம் சுருங்கி தமனிகளுக்குள் இரத்தத்தைப் பம்ப் செய்யும்போதான விசையைச் சிஸ்டாலிக் அழுத்தம் குறிக்கிறது, அதே நேரத்தில் துடிப்புகளுக்கு இடையில் உங்கள் இதயம் ஓய்வெடுக்கும் போதான விசையை டயஸ்டாலிக் அழுத்தம் குறிக்கிறது.
  • இந்த அளவீடுகள் பொதுவாக பாதரச மில்லிமீட்டரில் (mmHg) குறிக்கப்படுகின்றன.

சரியான அளவீடு மற்றும் அதன் தாக்கங்கள்

  • ஆரோக்கியமான இரத்த அழுத்தம் என்பது பொதுவாக 120/80 mmHg என்ற அளவில் இருக்கும்.
  • இருப்பினும், தனிப்பட்ட நபர்களைப் பொறுத்து மாறுபாடுகள் ஏற்படுவது இயல்பானதாகும்.
  • 130/80 mmHg -க்கு மேல் நிலையான அளவீடு இருந்தால் அது உயர் இரத்த அழுத்தத்தை (ஹைப்பர் டென்ஷன்) குறிக்கலாம், இது இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளுக்கான ஆபத்தை அதிகரிக்கக்கூடும்.

உங்கள் இரத்த அழுத்த அளவீடுகளைப் புரிந்துகொள்வது உகந்த ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கும் தீவிர இதய வாஸ்குலார் பிரச்சனைகளைத் தடுப்பதற்கும் முக்கியமாகும். எனவே, அந்த அளவீடுகளைத் தீவிரமானதாக எடுத்துக் கொள்ளவும், வழமையாக உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி அடியெடுத்து வைக்கவும்.

ஆதாரங்கள்:

  1. மயோ கிளினிக். (2021). உயர் இரத்த அழுத்தம் (ஹைப்பர் டென்ஷன்) மயோ கிளினிக். https://www.mayoclinic.org/diseases-conditions/high-blood-pressure/symptoms-causes/syc-20373410
  2. அமெரிக்க இதய சங்கம். உங்கள் இரத்த அழுத்த அளவீடுகளைப் புரிந்துகொள்ளுதல். அமெரிக்க இதய சங்கம். https://www.heart.org/en/health-topics/high-blood-pressure/understanding-blood-pressure-readings