Humrahi

டிஸ்லிப்பிடெமியாவைப் புரிந்துகொள்ளுதல்: தொடக்க நிலை வழிகாட்டி

டிஸ்லிப்பிடெமியா என்பது இரத்தத்தில் உள்ள கொழுப்பு அல்லது கொலஸ்ட்ராலின் அசாதாரண அளவைக் குறிக்கிறது, இது மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதற்கான குறிப்பிடத்தக்க ஆபத்து காரணியாகவும் உள்ளது. இதை கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடுகள் என்னும் உட்பொருட்களாகப் பிரிக்கலாம்.

  • கொலஸ்ட்ரால் என்பது நம் கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் மற்றும் நம் உணவின் மூலம் பெறப்படும் ஒரு மெழுகு போன்ற உட்பொருளாகும்.
  • குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் (LDL) கொலஸ்ட்ரால் பெரும்பாலும் "கெட்ட" கொழுப்பு என்று குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் இது இரத்த நாளங்களை சுருங்க வைக்கிறது.
  • உயர் அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் (HDL) கொலஸ்ட்ரால் "நல்ல" கொழுப்பு என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது இரத்தத்திலிருந்து LDL கொழுப்பை அகற்ற உதவுகிறது.s
  • டிரைகிளிசரைடுகள் என்பது இதய வாஸ்குலார் நோய் ஆபத்துடன் தொடர்புடைய மற்றொரு கொழுப்பு வகையாகும்.

டிஸ்லிப்பிடெமியா தொடர்பான பிற உண்மைகள்

  • டிஸ்லிபிடெமியாவுக்கு பல காரணிகள் உள்ளன: ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இன்மை, உடல் பருமன், புகைப்பிடித்தல், மரபணுக் காரணிகள்.
  • லிப்பிட் விவரம் எனப்படும் இரத்தப் பரிசோதனையைச் செய்வதன் மூலம் மொத்த கொலஸ்ட்ரால், LDL, HDL, டிரைகிளிசரைடை அளவிடலாம்.s
  • பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், லீன் புரதங்கள் நிறைந்த இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுதல்
  • டிஸ்லிப்பிடெமியாவைக் கட்டுப்படுத்த வழக்கமான உடற்பயிற்சி முக்கியமாகும். ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற மிதமான தீவிரத்தன்மை உடைய ஏரோபிக் உடற்பயிற்சிகளைச் செய்வதை இலக்காகக் கொள்ளவும்.
  • முடிந்த வரை விரைவாக மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.

நினைவிற்கொள்க, சிறிய மாற்றங்களும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் நல்வாழ்விலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்!

ஆதாரங்கள்:

  1. Pappan N, Rehman A. Dyslipidemia. [Updated 2022 Jul 11]. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2023 Jan-. Available from: https://www.ncbi.nlm.nih.gov/books/NBK560891/
  2. Pirahanchi Y, Sinawe H, Dimri M. Biochemistry, LDL Cholesterol. [Updated 2022 Aug 8]. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2023 Jan-. Available from: https://www.ncbi.nlm.nih.gov/books/NBK519561/