Humrahi

உடற்பயிற்சியின் திறன்: இரத்த அழுத்த மேலாண்மைக்கான ஒரு முக்கியக் கருவி

உயர் இரத்த அழுத்தம் அல்லது ஹைப்பர்டென்ஷன் என்பது உலகளவில் மில்லியன் கணக்கானவர்களைப் பாதிக்கிறது மேலும் இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற கடுமையான உடல்நலப் பிரச்சனைகளுக்குக் குறிப்பிடத்தக்க ஆபத்துக் காரணியாகவும் உள்ளது. நல்லவேளையாக, இந்த அமைதியான ஆட்கொல்லியை எதிர்த்துப் போராட இயற்கையான, செயல்திறமிக்க வழி உள்ளது: அதுதான் உடற்பயிற்சி.

வழக்கமான உடற்பயிற்சியின் காரணமாக உடலுக்குள் நேர்மறையான உடலியல் மாற்றங்கள் தூண்டப்படுகின்றன. உடற்பயிற்சியின் காரணமாக இரத்த நாளங்கள் விரிவடைந்து, இரத்த ஓட்டம் மேம்பட்டு அதற்கான தடைகள் குறைகிறது, இதன் விளைவாக இரத்த அழுத்தமும் குறைகிறது.

இரத்த அழுத்த மேலாண்மைக்கான உடற்பயிற்சிகளின் வகைகள்:

  1. ஏரோபிக் பயிற்சிகள்: இந்த உடற்பயிற்சியின்போது இதயத்துடிப்பு மற்றும் சுவாசம் அதிகரிக்கிறது, எடுத்துக்காட்டாக ஜாக்கிங், நடனம், ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகள். வாரத்தின் பெரும்பாலான நாட்களில் 30 நிமிட மிதமான-தீவிரத்தன்மை உடைய ஏரோபிக் பயிற்சியை மேற்கொள்வதை இலக்காகக் கொள்ளவும்.
  2. வலிமைப் பயிற்சி: பளு தூக்குதல், உடல் எடைக் கட்டுமானப் பயிற்சிகள் போன்ற ரெஸிஸ்டன்ஸ் பயிற்சிகள் தசை கட்டமைப்புக்கு உதவுகின்றன, இதன்மூலமும் இரத்த அழுத்தம் ஒழுங்குப்படுத்தப்படுகிறது.
  3. நெகிழ்வுத்தன்மை மற்றும் சமநிலைப் பயிற்சிகள்: யோகா அல்லது தாய் சி போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவது மன அழுத்தத்தைக் குறைத்து ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நினைவிற்கொள்க, எந்தவொரு உடற்பயிற்சி முறையைத் தொடங்குவதற்கு முன்பும், அது உங்களுக்குப் பாதுகாப்பானதாகவும் பொருத்தமானதாகவும் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த உங்கள் மருத்துவருடன் ஆலோசிப்பது முக்கியமாகும்.

ஆதாரங்கள்:

  1. American Heart Association. Managing Blood Pressure with a Heart-Healthy Diet. Retrieved from: https://www.heart.org/en/health-topics/high-blood-pressure/changes-you-can-make-to-manage-high-blood-pressure/managing-blood-pressure-with-a-heart-healthy-diet
  2. Cornelissen, V. A., & Smart, N. A. (2013). Exercise training for blood pressure: a systematic review and meta-analysis. Journal of the American Heart Association, 2(1), e004473. doi: 10.1161/JAHA.112.004473