இதய செயலிழப்புடன் வாழும் நபர்களுக்கு வழக்கமான இதயப் பரிசோதனைகள் என்பவை வழக்கமான சந்திப்புகளாக மட்டுமல்லாமல் சிறந்த ஆரோக்கியம், மேம்பட்ட வாழ்க்கைத் தரத்திற்கான முக்கிய உயிர்நாடிகளாக உள்ளன.
வழக்கமான இதயப் பரிசோதனைகள் நோயாளியின் இதய ஆரோக்கியத்தைக் கவனமாகக் கண்காணிக்க மருத்துவர்களுக்கு உதவுகின்றன. எலக்ட்ரோ கார்டியோகிராம்கள் (ECGs), எக்கோகார்டியோகிராம்கள், இரத்தப் பரிசோதனைகள் போன்ற பல்வேறு பரிசோதனைகள் மூலம், ஏதேனும் நுட்பமான மாற்றங்கள் அல்லது செயலிழப்பு அறிகுறிகளை மருத்துவர்கள் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய முடியும்.
முன்கூட்டியே கண்டறிவது உடனடி சிகிச்சைக்கு வழிசெய்கிறது, இதனால் இதயத்திற்கு மேலும் சேதம் ஏற்படுவது தடுக்கப்பட்டு, சிக்கல்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது.
வழக்கமான இதயப் பரிசோதனைகளின் நன்மைகள்
- இது சிகிச்சைத் திட்டங்களை உங்களுக்கு ஏற்ற வகையில் திட்டமிட மருத்துவர்களுக்கு உதவுகிறது
- இது உங்கள் முன்னேற்றத்தைக் கண்காணிக்க மருத்துவருக்கு உதவுகிறது
- வாழ்க்கை முறை மாற்றங்களுக்கான சரியான வழிகாட்டலை உங்களுக்கு வழங்க மருத்துவத் துறை சார்ந்தோருக்கு உதவுகிறது
- உங்கள் பராமரிப்பாளர்களுக்கு மிகவும் தேவையான உணர்வுரீதியான ஆதரவை வழங்க இது உதவுகிறது
நினைவிற்கொள்க, இது வெறும் மருத்துவருடனான சந்திப்பு மட்டுமல்ல; இது வலுவான இதயத்திற்கான ஓர் உயிர்நாடி.
ஆதாரங்கள்:
- American Heart Association. (2020). Heart Failure. https://www.heart.org/en/health-topics/heart-failure
- Mayo Clinic. Heart failure – Diagnosis and treatment. https://www.mayoclinic.org/diseases-conditions/heart-failure/diagnosis-treatment/drc-20373184