Humrahi

வேகவைத்த கோழி சாலட்(ஸ்டீம்டு சிக்கன் சாலட்)

உட்பொருட்கள்:

  • எலும்பு இல்லாத கோழி நெஞ்சுப்பகுதி(போன்லெஸ் சிக்கன் ப்ரெஸ்ட்) – 200கி
  • வெங்காயம் -1 நடுத்தரமானது (150கி)
  • தக்காளி -1 நடுத்தரமானது (120கி)
  • வெள்ளரிக்காய் -1 (150கி)
  • வெங்காயத்தாள் – 2 (15கி)
  • சிவப்பு குடைமிளகாய் – 1 நடுத்தரமானது (100கி)
  • மஞ்சள் குடைமிளகாய் – 1 நடுத்தரமானது (100கி)
  • கொத்தமல்லி –7-8 இலைகள்

டிரெஸ்ஸிங்

  • கெட்டித் தயிர் – 1 மேசைக்கரண்டி
  • ஆலிவ் எண்ணெய் – 1 தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
  • பிரியாணி இலை -1
  • உப்பு – சுவைக்கேற்ப
  • மிளகு - 1/2 தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு -1/2 தேக்கரண்டி

ஊட்ட மதிப்பு:

கலோரிகள் –425 கி கலோரி
புரதம் - 56 கி

முறை:

  1. கோழி நெஞ்சுப்பகுதியை கழுவி, சிறிய துண்டுகளாக வெட்டி, பிரஷர் குக்கரில் வைத்து இஞ்சி பூண்டு விழுது, பிரியாணி இலை சேர்த்து 10-15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  2. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து காய்கறிகளையும் உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் நறுக்கவும்.
    டிரஸ்ஸிங் தயார் செய்ய:
  3. ஒரு சிறிய ஜாடி/பாத்திரத்தை எடுத்து - 1 டீஸ்பூன் கெட்டித் தயிர், உப்பு, மிளகு, எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும்.
  4. சிறப்பாக டிரஸ்ஸிங் தயார் செய்ய அதை நன்றாக குலுக்கவும்.
  5. ஒரு கிண்ணத்தில் சமைத்த கோழி மற்றும் காய்கறிகளை அடுக்கவும். உங்கள் சுவைக்கு ஏற்ப அதன் மேல் டிரஸ்ஸிங்கை ஊற்றவும்.

நீங்கள் விரும்பலாம்