உயர் இரத்த அழுத்தம் திறம்பட கட்டுப்படுத்தப்படாவிட்டால், நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தில் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படலாம். உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான ஆறு வழிகள் பின்வருமாறு:
சரியானவற்றைச் சாப்பிடவும்
- அதிகப்படியான சோடியம் (உப்பு) கொண்ட உணவினால் உடலில் திரவம் தங்குகிறது, இதன் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
- அதற்குப் பதிலாக பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளான வாழைப்பழங்கள், தனியாக வேகவைத்த உருளைக்கிழங்கு, அவகோடா, சமைத்த வெள்ளை பீன்ஸ் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.
ஆல்கஹாலுக்கு வரம்புகளை அமைத்துக்கொள்ளவும், புகையிலையை முற்றிலும் தவிர்க்கவும்.
- அதிக அளவு மதுபானம் அருந்துவது இதயத்தைச் சேதப்படுத்தும்.
- நாளொன்றுக்கு பெண்கள் ஒரு கிளாஸ் மற்றும் ஆண்கள் இரண்டு கிளாஸிற்கு மேல் அருந்தாமல் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- புகையிலையைப் பயன்பாட்டை நிறுத்துவதும் உங்களுக்கு உதவலாம்.
மன அழுத்தத்தைக் குறைக்கவும்
- மன அழுத்தமான சூழ்நிலை குறுகிய காலத்தில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம்.
- தியானம் அல்லது நடைப்பயிற்சி போன்றவை உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
அறிவுறுத்தப்பட்டபடி மருந்துகளை எடுத்துக் கொள்ளவும்.
- நீங்கள் மருந்துகளின் நன்மையை முழுமையாகப்பெறுவதை உறுதிசெய்ய பரிந்துரைத்தப்படி மருந்துகளை எடுத்துக்கொள்வதை உறுதிசெய்யவும்.
உடற்பயிற்சி செய்யவும்
- உடற்பயிற்சி செய்பவர்கள் பொதுவாக குறைந்த இதயத் துடிப்பு வீதங்களைக் கொண்டுள்ளார்கள்.
- இதயம் சுருங்கும் ஒவ்வொரு முறையும் குறைவாக வேலை செய்கிறது, இதனால் தமனிகளின் மீதான அழுத்தம் குறைகிறது.
- பெரியவர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.s
இயற்கை சப்ளிமெண்ட்டை எடுத்துக்கொள்ளவும்
- முற்றிய பூண்டுச் சாறு, மீன் எண்ணெய், செம்பருத்தி, வெய் புரதம் போன்ற சில இயற்கை சப்ளிமெண்ட்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவலாம்.
ஆதாரங்கள்:
- Stress and High Blood Pressure: What’s the Connection?” Mayo Clinic, 18 Mar. 2021, mayoclinic.org/diseases-conditions/high-blood-pressure/in-depth/stress-and high-blood-pressure/art-20044190.
- Robinson, Lawrence. “Blood Pressure and Your Brain – HelpGuide.org.” Https://Www.helpguide.org, Mar. 2020, www.helpguide.org/articles/healthy-living/blood-pressure-and-your-brain.htm.