உங்கள் நோய்நிலையின் வகை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து இதய செயலிழப்பு அறிகுறிகள் மாறுபடும். நீங்கள் கடுமையான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதே இல்லை என்றால், லேசான இதய செயலிழப்பை உங்களால் கண்டறிய முடியாமலே போகலாம். இட அல்லது வலப்பக்க இதய செயலிழப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைப் பொறுத்தும் உங்கள் அறிகுறிகள் மாறுபடலாம். இருப்பினும், இரண்டு வகையான அறிகுறிகளும் ஏற்படலாம். உங்கள் இதயம் பலவீனமடையும்போது, அறிகுறிகள் மேலும் மோசமடைகின்றன. இதய செயலிழப்பு காரணமாக கடுமையான, சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.
ஆரம்பநிலை எச்சரிக்கை அறிகுறிகள்::
- படிக்கட்டுகளில் ஏறுவது போன்ற சாதாரண செல்பாடுகளின் போது கூட மூச்சுத்திணறல் ஏற்படுவது உங்களுக்கு ஏற்படக்கூடிய முதல்நிலை அறிகுறிகளில் ஒன்றாகும்.
- இதயம் இன்னும் பலவீனமடைந்தால், உடை அணியும்போது அல்லது அறைக்குள் நடக்கும்போது, படுத்து ஓய்வெடுக்கும்போது கூட சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதை நீங்கள் கவனிக்கலாம்
- இடப்பக்க இதய செயலிழப்பு: சுவாசிப்பதில் சிரமம், இருமல், ஓய்வெடுத்த பிறகும் கடுமையான சோர்வு, பொதுவான பலவீனம், நீல நிற விரல் மற்றும் உதடுகள், தூக்கக் கலக்கம் மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம், மல்லாக்கப் படுக்கும்போது தூங்க இயலாமை போன்ற அறிகுறிகள் உங்களுக்கு ஏற்படக்கூடும்
- வலப்பக்க இதய செயலிழப்பு: குமட்டல், பசியின்மை, வயிற்றுப் பகுதியில் வலி, உங்கள் கணுக்கால், கால்கள், அடிவயிறு, கழுத்து நரம்புகளில் வீக்கம், அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் எடை அதிகரிப்பு.
மேற்கூறிய அறிகுறிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை உங்களுக்கு இருந்தால், அவற்றை உங்கள் மருத்துவக் குழுவிற்கு உடனடியாகத் தெரிவித்து, இதற்கு முன்பு உங்களுக்கு இதயப் பிரச்சினைகள் எதுவும் இல்லாவிட்டாலும் கூட, உங்கள் இதயத்தை மதிப்பீடு செய்யக் கேட்கவும்.
ஆதாரம்:
- National Heart, Lung and Blood institute. https://www.nhlbi.nih.gov/health/heart-failure.
- American Heart Association. Heart attack and stroke symptoms. https://www.heart.org/en/health-topics/heart-failure/warning-signs-of-heart-failure.
.