ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் சேர்த்து மருந்துகளைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதன் மூலம் உகந்த கொலஸ்ட்ரால் அளவுகளையும் ஆரோக்கியமான இதயத்தையும் நீங்கள் அடையலாம்.
உங்கள் கொலஸ்ட்ரால் மருந்துகளை வழமையாக எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடைமுறை உதவிக்குறிப்புகள்:
- மருந்துகளை வழமையான முறையில் எடுத்துக்கொள்வதன் முக்கியத்துவம்: கொலஸ்ட்ரால் மருந்துகளின் நன்மைகளைப் பற்றியும் அதை எடுத்துக்கொள்ளாவிட்டால் உங்கள் உடல்நலனில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் அறிந்துகொள்ளவும்.
- வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்: மருந்துகளை எடுத்துக்கொள்வதை உங்கள் அன்றாட வழக்கங்களில் ஒன்றாகச் சேர்த்துக் கொள்ளவும், உங்களுக்கு விழிப்பூட்டுவதற்காக மருந்து நினைவூட்டல் செயலிகள் அல்லது அலாரங்களைப் பயன்படுத்தவும்.
- உங்கள் மருந்துகளை ஒழுங்குபடுத்தவும்: மருந்தளவைத் தவறவிடுவதைத் தவிர்க்க உங்கள் மருந்துகளை மாத்திரைப் பெட்டியில் அல்லது வாராந்திர மாத்திரை ஒழுங்குபடுத்தியில் ஒழுங்கமைத்து வைக்கவும்.
- உதவிக்கு இந்த செயல்முறையில் பிறரையும் ஈடுபடுத்தவும்: உங்கள் மருந்து அட்டவணை பற்றி உங்கள் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள், நம்பகமான பராமரிப்பாளரிடம் தெரிவிக்கவும்.
- மருந்துகளை முன்கூட்டியே மீண்டும் நிரப்பி வைத்துக்கொள்ளவும்: மருந்துகளை முன்கூட்டியே நிரப்பி வைப்பதன் மூலம் அல்லது மீண்டும் நிரப்ப வேண்டிய தேதிகளுக்கான நினைவூட்டல்களை அமைப்பதன் மூலம் உங்கள் கொலஸ்ட்ரால் மருந்துகள் காலியாவதைத் தவிர்க்கவும்.
- தகவலறிந்து செயல்படவும்:ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அவற்றைத் தெரிந்துகொள்வதன் மூலம் உங்கள் மருந்துகள் பற்றிய தகவல்களை அறிந்து செயல்படவும்.
- மருத்துவர் சந்திப்புகள்:நோய் நிலை முன்னேற்றம் குறித்து ஆலோசிக்க மற்றும் தேவையான மாற்றங்களைச் செய்வதற்காக உங்கள் மருத்துவருடன் சந்திப்புகளில் கலந்துகொள்ளவும்.
ஆதாரம்:
- (2020, September 3). Types of cholesterol-lowering medicine. Centers for Disease Control and Prevention. https://www.cdc.gov/cholesterol/treating_cholesterol.htm#:~:text=Statin%20drugs%20lower%20LDL%20cholesterol
- Center for Drug Evaluation and Research. (2016, February 16). Why You Need to Take Your Medications as Prescribed or Instructed. U.S. Food and Drug Administration. https://www.fda.gov/drugs/special-features/why-you-need-take-your-medications-prescribed-or-instructed