Humrahi

உங்கள் நீரிழிவு நோய்க்கான ஆபத்து மற்றும் அது தொடர்பாக நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்

உலகெங்கிலும் உள்ள 10 நபர்களில் 1 நபர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட 50% பேர் கண்டறியப்படாமல் உள்ளனர். நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், பார்வை இழப்பு, இருதய நோய், சிறுநீரக நோய், நரம்பு பாதிப்பு மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்கள் போன்ற தீவிரமான மற்றும் உயிருக்கு ஆபத்தான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

ஆரம்பகால நோயறிதல் மற்றும் சரியான சிகிச்சையானது நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், அதன் சிக்கல்களைத் தாமதப்படுத்தவும் அல்லது தடுக்கவும் உதவும். எனவே, சரியான நேரத்தில் சிகிச்சையை உறுதிசெய்ய, இந்த நோயை உருவாக்கும் அபாயத்தை நீங்கள் அறிந்திருப்பது முக்கியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் சில ஆபத்து காரணிகளைக் கட்டுப்படுத்தலாம், சிலவற்றைக் கட்டுப்படுத்த முடியாது.

சில முக்கிய நீரிழிவு ஆபத்து காரணிகள் இங்கே:

குடும்ப வரலாறு: பெற்றோர், சகோதரர் அல்லது சகோதரி போன்ற நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த உறவினராக இருந்தால், அது உங்களுக்கு நீரிழிவு நோய்க்கான ஆபத்தை கணிசமாக அதிகரிக்கிறது.

வயது: டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் ஆபத்து வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது, பொதுவாக நடுத்தர வயதுடையவர்களில் இது ஏற்படுகிறது.

எடை: உடல் பருமன் அல்லது அதிக எடை ஒரு முக்கிய ஆபத்து காரணியாகும். உடல் எடையை 5% முதல் 10% வரை குறைப்பது நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது.

உடற்பயிற்சி: ப்ரீடியாபயாட்டீஸ் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்க்கான முக்கிய ஆபத்து காரணி உடல் உழைப்பினமையே ஆகும். வழக்கமான உடற்பயிற்சி நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது. உங்கள் இலக்கு:

  • வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான முதல் தீவிரமான ஏரோபிக் உடற்பயிற்சி;
  • அல்லது வாரத்திற்கு 75 நிமிடங்கள் அதிதீவிர ஏரோபிக் உடற்பயிற்சி (அல்லது இரண்டின் கலவை);
  • வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது தசையை வலுப்படுத்தும் பயிற்சி.

இரத்த அழுத்தம்: சிகிச்சையளிக்கப்படாத உயர் இரத்த அழுத்தம் இருதயம் மற்றும் சிறுநீரகங்களை சேதப்படுத்தும். நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் 130/80 mm Hg க்கும் குறைவான இரத்த அழுத்தத்தில் பராமரிக்க வேண்டும்.

உணவு முறை: ப்ரீடியாபயாட்டீஸ் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்க்கான மிக முக்கியமான ஆபத்து காரணிகளில் ஒன்று உணவுமுறையாகும். கொழுப்பு, கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவு உங்கள் நீரிழிவு நோய்க்கானஅபாயத்தை அதிகரிக்கிறது. சத்தான உணவுகளை சரியான அளவில் மற்றும் குறிப்பிட்ட நேரங்களில் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை விரும்பிய வரம்பிற்குள் பராமரிக்க உதவுகிறது. பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியங்கள், தோல் இல்லாத கோழி, மீன், பருப்பு வகைகள், வெப்பமண்டல அல்லாத தாவர எண்ணெய்கள் மற்றும் உப்பு சேர்க்காத கொட்டைகள் மற்றும் விதைகளை சாப்பிடுங்கள்.

புகைபிடித்தல்: புகைபிடிக்காதவர்களை விட புகைபிடிப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 30-40% அதிகம். புகை பிடிக்காதீர்கள். நீங்கள் புகைப்பிடித்தலை விட உதவும் பரிந்துரைகளுக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்.

மது: அதிக அளவு மது அருந்துவது கணையம் மற்றும் கல்லீரலை சேதப்படுத்தும். உங்கள் ஆல்கஹால் உட்கொள்ளலை குறைக்கவும் அல்லது முற்றிலும் தவிர்க்கவும்.

மன அழுத்தம் மற்றும் நல்வாழ்வு: நம் வாழ்வில், நீரிழிவு நோய்க்கு மட்டுமல்ல, இதய நோய் மற்றும் பல நிலைமைகளுக்கும் மன அழுத்தத்தை நிர்வகிப்பது ஆரோக்கியமான வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாகும் . உங்கள் மன அழுத்தத்திற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைத் தீர்க்க முயற்சிக்கவும். நீங்கள் விரும்பும் விஷயங்களுக்கு நேரம் ஒதுக்குங்கள். போதுமான தூக்கத்தைப் பெற முயற்சிக்கவும், உடற்பயிற்சி, ஓய்வு மற்றும் ஓய்வு நேரத்தை உங்கள் வழக்கத்தில் இணைக்கவும்.

தூக்கம்: டைப் 2 நீரிழிவு நோயாளிகளில் மிகக் குறைந்த அல்லது அதிக தூக்கம் அதிக A1C உடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு இரவில் ஏழு முதல் ஒன்பது மணிநேரம் தூங்குவதை உறுதிசெய்ய வழக்கமான தூக்க அட்டவணையைப் பின்பற்ற முயற்சிக்கவும்.
உங்கள் ஆபத்து காரணிகளை அறிந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வது டைப் 2 நீரிழிவு மற்றும் அதன் சிக்கல்களைத் தாமதப்படுத்த அல்லது தடுக்க உதவும்.(62,63)