Humrahi

சரியான இன்சுலின் ஊசிபோடும் உத்தியைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம்

இன்சுலின் சிகிச்சை தேவைப்படும் நபர்களைப் பொறுத்தவரை, அவர்களின் இரத்த சர்க்கரை அளவை திறம்பட நிர்வகிக்க சரியான இன்சுலின் ஊசி போடுவது முக்கியமானது.

சரியான முறையில் இன்சுலின் ஊசியை எடுத்துக்கொள்வதன் மூலம், நீரழிவு நோயாளிகள் இன்சுலின் அளிப்பை உகந்ததாக்க முடியும். இரத்த சர்க்கரை அளவை சிறப்பாகக் கட்டுப்படுத்த முடியும், தவறான முறையில் ஊசி போடுவதோடு தொடர்புடைய சிக்கல்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முடியும். இன்சுலின் சிகிச்சை மற்றும் ஊசி எடுத்துக்கொள்ளும் முறை பற்றிய தனிப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு ஒரு சுகாதார நிபுணரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.s

சரியான ஊசிபோடும் முறைகள் முக்கியம் என்பதற்கான முக்கியக் காரணங்கள்

  1. துல்லியமான இன்சுலின் மருந்தளவு: இன்சுலினைத் துல்லியமாக அளிப்பது உகந்த இரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாட்டைப் பராமரிப்பதற்கு அவசியம். இன்சுலின் மருந்தளவு சரியான அளவில் தொடர்ந்து அளிக்கப்படுவதை சரியான ஊசிபோடும் முறை உறுதிசெய்கிறது. கடுமையான சுகாதார விளைவுகளை ஏற்படுத்தும் ஹைப்பர்கிளைசீமியா (உயர் இரத்த சர்க்கரை அளவு) மற்றும் ஹைப்போகிளைசீமியா (குறை இரத்த சர்க்கரை) நிகழ்வுகளை சரியான மருந்தவு தடுக்கும்.
  2. நீடித்த முறையில் உள்ளீர்த்தல்: ஊசி உட்செலுத்தலின் சரியான இடம் மற்றும் கோணம் இரத்த ஓட்டத்தில் இன்சுலினை உறிஞ்சுவதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. பரிந்துரைக்கப்பட்ட ஊசி போடும் முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், தனிநபர்கள் இன்சுலின் உறிஞ்சுதலின் நிலைத்தன்மையையும் முன்கணிப்புத்தன்மையையும் அதிகரிக்க முடியும். இது நாள் முழுவதும் நிலையான இரத்த சர்க்கரை அளவை அடைய உதவுகிறது.
  3. சிக்கலைக் குறைத்தல்: ஒரே இடத்தில் பலமுறை ஊசி போடுதல் அல்லது ஊசிகளை மீண்டும் பயன்படுத்துதல் ஆகியவை தோல் அடியில் கொழுப்பு (லிபோஹைபெர்டிராபி) திரட்சிக்கு வழிவகுக்கும். இந்த பகுதிகளில் ஊசியை உட்செலுத்துதல் என்பது ஒழுங்கற்ற இன்சுலின் உறிஞ்சுதல், கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்தச் சர்க்கரைக் குறைவு நிகழ்வுகளை ஏற்படுத்தலாம். மேலும், மச்சங்கள், தழும்புகள் அல்லது தோலில் எரிச்சல் ஏற்படும் இடங்களில் ஊசி போடுவது வலி, தொற்று அல்லது திசு சேதத்தை ஏற்படுத்தலாம். சரியான நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமும், ஊசி போடும் இடங்களை மாற்றுவதன் மூலமும், தனிநபர்கள் இந்த சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கலாம். இன்சுலினைத் தொடர்ந்து எடுக்கும் நோயாளிகள் வழக்கமான பராமதிப்பின் ஒரு அங்கமாக குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது ஊசிபோடும் இடத்தைச் சரிபார்க்க வேண்டும்.
  4. மேம்பட்ட வாழ்க்கைத் தரம்: சரியான இன்சுலின் ஊசி போடும் முறை என்பது நீரழிவு நோய் உள்ள தனிநபர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம் உயர வழிவகுக்கும். சிறந்த இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை அடைவதன் மூலம், இருதய நோய், சிறுநீரக பாதிப்பு, நரம்பு பாதிப்பு மற்றும் பார்வைக் கோளாறுகள் போன்ற நீண்டகால சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கலாம். நிலையான இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பது சிகிச்சை திருப்தியை மேம்படுத்துகிறது மற்றும் அதிக ஆற்றல் உள்ளவர்களாகவும், கவனம் உள்ளவர்களாகவும் மற்றும் தினசரி நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபடுவதை உணரவும் தனிநபர்களுக்கு உதவுகிறது.
  5. தனிப்பட்ட பாதுகாப்பு: தற்செயலாக ஊசிக் காயம் ஏற்படும் அபாயத்தைக் குறைவதாலும் தொற்றுகளின் அபாயம் குறைவதாலும் சரியான ஊசிபோடும் முறையைப் பின்பற்றுவதன் மூலம் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகரிக்கும். குறிப்பிட்ட கூரிய பொருட்களுக்கான கலன்களில் பயன்படுத்திய ஊசிகளை சரியான முறையில் அகற்றுவதன் மூலமும் அவற்றை எச்சரிக்கையோடு கையாளுவதன் மூலமும், தனிப்பட்ட நபர்கள் தங்களையும் மற்றவர்களையும் சாத்தியமானன தீங்குகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். இன்சுலினை எப்போது எப்படி எடுக்க வேண்டும் என்பது பற்றியும், என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பது பற்றியும், மற்ற என்னென்ன மாற்றங்களை நீங்கள் செய்துகொள்ள வேண்டும் என்பது பற்றியும் உங்களுடைய மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள்.28,29