Humrahi

உங்களுடைய இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்?

ஹைப்பர்கிளைசீமியா என்பது உயர் இரத்த சர்க்கரை அளவு, இது பெரும்பாலும் நீரிழிவு நோயுடன் தொடர்புடையது, அதே சமயம் ஹைப்போகிளைசீமியா என்பது இரத்தச் சர்க்கரைக் குறைவாகும். இது குழப்பம் மற்றும் வியர்வை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். சீரான இரத்த குளுக்கோஸை பராமரிப்பது குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது.

நீரிழிவு நோயாளிகளைப் பொருத்தவரை ஹைப்பர்கிளைசீமியாவின் அறிகுறிகள் சில நாட்கள் அல்லது வாரங்களில் மெதுவாக அதிகரிக்கும். சிலருக்கு, இரத்தச் சர்க்கரை அளவு மிக அதிகமாகும்வரை எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருக்கலாம்.

ஹைப்பர்கிளைசீமியாவின் அறிகுறிகளில் அடங்குவன:

கீழ்க்காணும் காரணங்களினால் ஹைப்பர்கிளைசீமியா ஏற்படலாம்:

  • சர்க்கரை நோய்
    o 1-ஆம் வகை நீரழிவு நோயில், கணையத்தினால் இன்சுலினை உற்பத்தி செய்ய இயலுவதில்லை.
    o 2-ஆம் வகை நீரழிவு நோயில், இரத்தச் சர்க்கரையினை நிலைப்படுத்தப் போதுமான இன்சுலினை கணையத்தினால் உற்பத்தி செய்ய இயலுவதில்லை.
    o இரு சூழல்களிலும், இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அதிகரிப்பதால், ஹைப்பர்கிளைசீமியா ஏற்படுகிறது.
  • மன அழுத்தம்
  • சளி போன்ற நோய்கள்.
  • உணவு நேரங்களுக்கிடையில் நொறுக்குத்தீணி போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வது
  • உடற்பயிற்சி குறைவாக இருப்பது
  • நீரிழப்பு (டிஹைட்ரேஷன்)
  • சர்க்கரை மருந்துகளை எடுக்காதிருப்பது அல்லது தவறான மருந்தளவை எடுப்பது
  • ஹைப்போகிலைசீமியா (குறை சர்க்கரை அளவு) நிகழ்விற்கு மிக அதிகமாகச் சிகிச்சை பெறுவது
  • ஸ்டீராய்டு மருந்து போன்ற சில குறிப்பிட்ட மருந்துகளை எடுப்பது.

வளர்ச்சிப் பெருக்கத்தின்போது சிறார்களுக்கும் இளைஞர்களுக்கும்கூட அவ்வப்போது இந்த ஹைப்பர்கிளைசீமியா ஏற்படலாம். கண்டறியப்படாத நீரழிவு நோய் காரணமாகவும் ஹைப்பர்கிளைசீமியா அறிகுறிகள் இருக்கலாம். எனவே, கூடுதல் சிகிச்சை பெற மருத்துவரின் ஆலோசனை உதவியாக இருக்கும்.

ஹைப்பர்கிளைசீமியாவின் அறிகுறிகளில் அடங்குவன:

  • அதிகப்படியான தாகம் மற்றும் நாவு வறட்சி
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  • சிறுநீரில் அதிக குளுகோஸ் அளவு
  • சோர்வு
  • எதிர்பாராத விதத்தில் உடல் எடை குறைவது
  • எதிர்பாராத விதத்தில் உடல் எடை குறைவது
  • வாய்ப்புண், சிறுநீரகப் பாதைத் தொற்று, மற்றும் தோல் தொற்றுகள் போன்ற தொற்றுகள் மீண்டும் மீண்டும் ஏற்படுவது

சிகிச்சையளிக்கப்படாத ஹைப்பர்கிளைசீமியாவினால் ஏற்படும் சிக்கல்களில் அடங்குவன:

  • இதயநாள நோய்கள்
  • சிறுநீரக நோய்
  • நரம்புச் சேதம்
  • தொற்று
  • எலும்புப் பிரச்சனைகள்
  • உறுப்பு நீக்கம் அல்லது உயிரிழப்பு

ஹைப்பர்கிளைசீமியாவைத் தடுக்கும் வழிகள்

  • ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்தல்
  • தொடர்ந்த உடற் பயிற்சி
  • அதிகமாக புதிய பழங்களையும் காய்கறிகளையும் எடுப்பது & உமிநீக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டு உணவுகளைக் குறைப்பது
  • அறிவுறுத்தப்பட்டபடி சர்க்கரை நோய்க்கான மருந்துகளை எடுப்பது
  • இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிப்பது33,34,35,36