எனக்கு அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் என்ன நடக்கும்?
- கொலஸ்ட்ரால் நமது உடலியல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது, இது செல்கள், ஹார்மோன்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது.
- குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் (LDL) கொலஸ்ட்ரால் "கெட்ட" கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது, இதனால் இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற இதய வாஸ்குலார் நோய் நிலைகள் ஏற்படுவதற்கான ஆபத்துக் காரணிகள் அதிகரிக்கின்றன.
எனது கொலஸ்ட்ரால் அளவை கண்காணிப்பது எப்படி?
- லிப்பிட் விவரம் என்று அழைக்கப்படும் ஓர் எளிய இரத்தப் பரிசோதனையைச் செய்து கொள்வதன் மூலம் மொத்த கொலஸ்ட்ரால், LDL கொலஸ்ட்ரால், அதிக அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் (HDL) கொலஸ்ட்ரால், டிரைகிளிசரைடு அளவுகளை அளவிடலாம்.
நான் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?
- இதயத்திற்கு நன்மையளிக்கும் உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுதல்
- வழக்கமாக உடற்பயிற்சி செய்தல்
- புகைப்பிடித்தலை நிறுத்துதல் மற்றும் மதுபானம் அருந்துவதைக் குறைத்தல்
- மருந்துகளை எடுத்துக் கொள்கிறீர்கள் எனில், மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.
உங்கள் கொலஸ்ட்ரால் அளவை எவ்வளவு அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும்?
உங்கள் வயது, குடும்ப வரலாறு மற்றும் தற்போதுள்ள உடல்நல நிலைமைகளைப் பொறுத்து ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது உங்கள் கொலஸ்ட்ரால் அளவைப் பரிசோதனை செய்யப் பரிந்துரைக்கப்படுகிறது.
ஆதாரங்கள்:
- Blood Cholesterol – What is Blood Cholesterol? | NHLBI, NIH. (2022, March 24). Www.nhlbi.nih.gov. https://www.nhlbi.nih.gov/health/blood-cholesterol
- Mayo Clinic . (2019). Cholesterol test – Mayo Clinic. Mayoclinic.org. https://www.mayoclinic.org/tests-procedures/cholesterol-test/about/pac-20384601
- Sundjaja JH, Pandey S. Cholesterol Screening. [Updated 2023 May 1]. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2023 Jan-. Available from: https://www.ncbi.nlm.nih.gov/books/NBK560894/