Humrahi

சிக்கன் டிக்கா கத்தி ரோல்

உட்பொருட்கள்:

  • எலும்பு இல்லாத கோழி நெஞ்சுப்பகுதி நீளவாக்கில் கீற்றுகளாக வெட்டி – 125கி
  • தயிர்- ¼ கப் [60 மிலி]
  • எலுமிச்சை சாறு - ½ தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது - 7.5கி
  • மிளகாய் தூள் – ½ தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் - ½ தேக்கரண்டி
  • சீரகத்தூள் - ½ தேக்கரண்டி
  • உப்பு – சுவைக்கேற்ப
  • எண்ணெய் –1 மேசைக்கரண்டி
  • வெங்காயம் –50கி
  • தக்காளி – 50கி
  • கோதுமை மாவு – 30கி
  • கொத்தமல்லித்தழை - 15கி புதியது
  • புதினா இலைகள் – 15கி
  • பச்சை மிளகாய் - 1-2
  • இஞ்சி – 5கி
  • உப்பு – சுவைக்கேற்ப

ஊட்ட மதிப்பு:

கலோரிகள் - 392 கி கலோரி
புரதம் – 36கி

முறை:

  1. தயிர் எலுமிச்சை சாறு - பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சீரக தூள் மற்றும் உப்பு சேர்த்து 30 நிமிடங்களுக்கு கோழியை ஊற வைக்கவும். மாரினேஷன் கோழியின்மீது நன்றாக பூசப்பட்டதை உறுதிப்படுத்தவும்.
  2. கோதுமை மாவை பிசைந்து தனியாக வைக்கவும்.
  3. ஒரு கிரில் கடாயை சூடாக்கவும் - 1 தேக்கரண்டி எண்ணெயைச் சேர்த்து, மாரினேட் செய்யப்பட்ட சிக்கனை சேர்க்கவும், சிறிது எண்ணெய் சேர்த்து 15-20 நிமிடங்கள் வேகவைக்கவும். இருபுறமும் வேக விடவும்.
  4. சிக்கன் டிக்கா தயார் - கொத்தமல்லித்தழை கொண்டு அலங்கரிக்கவும்.
  5. கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையான கலவையாகும் வரை கலக்கவும். சிறிது தண்ணீரைச் சேர்ப்பதன் மூலம் தேவையான பதத்திற்கு சரிசெய்யவும்.
  6. மாவை சப்பாத்தியாக திரட்டி, தவாவில் சிறிது எண்ணெய் விட்டு வெளிர் பழுப்பு நிறமாகும் வரை சமைக்கவும்.
  7. ஒன்றாக திரட்ட - சப்பாத்தியின் மேல் பச்சை சட்னியைப் பரவலாகத் தடவவும். அதில் சில சிக்கன் டிக்கா துண்டுகளை வைக்கவும். அதன் மேலே வெட்டப்பட்ட வெங்காயம், தக்காளி, வெள்ளரிகள் மற்றும் மல்லி, புதினா இலைகளை வைக்கவும். சப்பாத்தியை ரேப்பிங் பேப்பர் மூலம் கவனமாக உருளையாக சுற்றவும்.

நீங்கள் விரும்பலாம்