Humrahi

செபாலபுலுசு (புளி மீன் குழம்பு)

உட்பொருட்கள்:

  • மீன் – 330கி
  • எண்ணெய் – 10மிலி
  • கடுகு – 5கி
  • வெந்தயம் – 5கி
  • வர மிளகாய் – 5கி
  • கருவேப்பிலை – 10கி
  • வெங்காயம் – 2 நடுத்தர அளவில் or 200கி
  • தக்காளி – 2 or 150கி
  • சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது – 10கி
  • மஞ்சள் தூள் – 1தேக்கரண்டி
  • புளி (உலர்ந்தது) – 50கி
  • பச்சை மிளகாய் (கீறியது)– 1
  • தண்ணீர் – 600 மிலி
  • கொத்தமல்லித்தழை (பொடியாக நறுக்கியது) – 10 கி
  • உப்பு – சுவைக்கேற்ப
  • மிளகாய் தூள் – சுவைக்கேற்ப

ஊட்ட மதிப்பு:

கலோரிகள் - 750 கி கலோரி
புரதம் – 66கி

முறை:

  • மீனை 1 அங்குல தடிமனான நடுத்தர அளவிலான துண்டுகளாக நறுக்கவும்.
  • வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி, தயாராக வைக்கவும்.
  • உலர்ந்த புளியை ½ கப் வெதுவெதுப்பான நீரில் சில நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • வெதுவெதுப்பான நீரில் புளியை நன்றாக பிழிந்து புளித்தண்ணீரை பிரித்தெடுக்கவும்.
  • புளி தண்ணீரை வடிகட்டி தனியாக வைக்கவும். புளியிலிருந்து மீதமுள்ள சாற்றை பிழிவதற்கு மீண்டும் 100 மிலி தண்ணீர் சேர்க்கவும்.
  • மீண்டும் வடிகட்டி தனியாக வைக்கவும். அந்த புளி தண்ணீரை பயன்படுத்தவும்.
    குறிப்பு: புளி பேஸ்ட்டை பயன்படுத்தினால் (இரட்டிப்புஅடர்த்தியானது, கடையில் வாங்கப்பட்டது) குழம்பு பதத்திற்கேற்ப தண்ணீர் சேர்க்கவும்.
  • புளியை நீங்கள் விரும்பும் புளிப்பு சுவைக்கு ஏற்றவாறு பயன்படுத்தவும்.
  • ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெயை சூடாக்கி, கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதமாகும் வரை மிதமான தீயில் வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
  • மஞ்சள் தூள், சீரக தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்க்கவும். மிதமான தீயில் 4 முதல் 5 நிமிடங்கள் அல்லது தக்காளி மென்மையாகும் வரை சமைக்கவும்.
  • 250 மிலி தண்ணீர் சேர்த்து, 5 முதல் 8 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • 100 மிலி புளி சாறு மற்றும் 250 மிலி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும், 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  • இப்போது மீன் துண்டுகளை கவனமாக பாத்திரத்தில் வைக்கவும், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.
  • பாத்திரத்தை கரண்டியால் கலக்குவதற்குப் பதிலாக நன்றாக குலுக்கவும். அதனால் மீன் துண்டுகள் உடையாமல் இருக்கும்.
  • மூடியை மூடி மீன் குழம்பு வேகும் வரை, 10 முதல் 12 நிமிடங்கள் வரை வேக வைக்கவும், இடையிடையே பாத்திரத்தை சுழற்றவும், மெதுவாக குலுக்கவும்.
  • குழம்பு பதம் அடையும் வரை, புளியின் பச்சை வாசனை மறையும் வரை சமைக்கவும்.
  • தீயைக் குறைத்து, உப்பு சேர்த்து, மூடி, குறைந்த தீயில் 10 முதல் 12 நிமிடங்கள் வரை சமைக்கவும். குழம்பு கெட்டியாகி எண்ணெய் பிரியும் வரை விடவும்.
  • உப்பை சரிபார்த்து, மீண்டும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.
  • இந்த ருசியான ஆந்திரா செபாலபுலுசு (மீன் குழம்பு) சாதத்துடன் அல்லது ராகி சங்கதி/ராகி சங்கத்துடன் பரிமாறவும்.

நீங்கள் விரும்பலாம்