Humrahi

அவக்காடோ & காலிஃபிளவர் ஹம்முஸ்

உட்பொருட்கள்:

வேக வைத்த கொண்டைக் கடலை – 1 கப்
அவக்காடோ – 1 நடுத்தர அளவு
காளிஃப்ளவர் – 1 நடுத்தர அளவு
எள் விதை - 1 கப் (டாகினி தயாரிக்க)
ஆலிவ் எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
எலுமிச்சைச் சாறு – 2 தேக்கரண்டி
3 பூண்டு பற்கள்
சீரகப் பொடி – ¼ தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
கருப்பு மிளகு – சுவைக்கு ஏற்ப
சிவப்பு மிளகாய் சீவல்கள் – மேலே தூவுவதற்கு

ஊட்ட மதிப்பு:

ஆற்றல்: 180 கி.கலோரி
புரதம்: 14.5 கிராம்

முறை:

  • டாகினியைத் தயாரிக்க, எள் விதைகளை வறுத்து, அதனுடன் ½ தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்விட்டு, ஒரு மிருதுவான விழுதைத் தயாரிக்கவும்.
  • ஒரு ஃபூட் பிராசஸரில் கொண்டைக் கடலை, டாகினி, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி, பூண்டு பற்கள் ஆகியவற்றைச் சேர்த்து சில ஐஸ் கட்டிகளையும் சேர்த்து மிருதுவான நுரைமிக்க விழுதைத் தயாரிக்கவும்.s
  • தேவையான பதம் வரும்வரை சிறிது சிறிதாக எண்ணெயை ஒரு நேரத்தில் ஒரு மேசைக்கரண்டி என சேர்க்கவும்.
  • உணவின்மீது உப்பு மற்றும் கருப்பு மிளகைத் தூவுங்கள்.பேஸ் தயாராகிவிட்டது.
  • அவக்காடோவைத் தயாரிக்க, உரித்து வெட்டிய அவக்காடோவை பேஸ்-உடன் சேர்த்து மிருதுவான பேஸ்ட்டாக மாற்ற நன்றாகக் கலக்கவும்.
  • ஒரு கிண்ணத்திற்கு மாற்றி, ஆலிவ் எண்ணெய் மற்றும் மிளகாய் தூளை தூவி பரிமாறவும்.
  • காலிஃபிளவரைத் தயாரிக்க, சூடான வானலியில், எண்ணெய் ஊற்றி காலிஃபிளவரை வதக்கி, உப்பு மற்றும் மிளகைத் தூவவும்.
  • மிருதுவாகும்வரை 20-25 நிமிடங்கள் வேக வைக்கவும்.(பேக்கிங்கிற்குப் பதிலாக காலிஃபிளவரை ரோஸ்டிங் ரேக்கில் வறுக்கவும் செய்யலாம்).அது குளிரட்டும்.
  • வறுத்த காலிஃபிளவரை பேஸ்-ல் வைத்து மிருதுவான பேஸ்ட்டாக மாற்ற நன்றாகக் கலக்கவும்.
  • ஒரு கிண்ணத்திற்கு மாற்றி, ஆலிவ் எண்ணெய் மற்றும் மிளகாய் தூளை தூவி பரிமாறவும்.

நீங்கள் விரும்பலாம்