அமராந்த் பர்ரிட்டோ பவுல்
உட்பொருட்கள்:
- 1 கப் தண்ணீர்s
- ½ கப் அமராந்த் (வாடா மலர்)
- வேகவைத்த தட்டைப் பயறு
- தக்காளி (1/2 கப்)
- வெங்காயம் (1/2 கப்)
- பச்சை பீன்ஸ் (1/4 கப்)
- கேரட் (1/4 கப்)
- சோளம் (1/2 கப்)
- எலுமிச்சைச் சாறு
- ½ கப் புளித்த பாலாடை
ஊட்ட மதிப்பு:
ஆற்றல்: 626 கி.கலோரி
புரதம்: 20.68 கிராம்
முறை:
- ஒரு வானலியில் 1 கப் தண்ணீரில் அமராந்தை வேக வைக்கவும்; 20 நிமிடம் லேசான சூட்டில் தொடர்ந்து வைத்திருந்து அது கெட்டியான கூல்போன்று வரும்வரை விடுங்கள். அவ்வப்போது கிண்டி விடுங்கள். அடுப்பிலிருந்து எடுத்து விடுங்கள். சிறிது நேரம் அது குளிரட்டும்.
- 2 கப் தண்ணீரில் பச்சை பீன்ஸ், கேரட் மற்றும் சோளத்தை வேக வைத்து, வடித்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
- இரவு முழுவதும் ஊறவைத்த தட்டைப் பயறை ½ ஸ்பூன் உப்பு விட்டு பிரஷர் குக்கரில் 5 விசில் வரும்வரை வேக விடுங்கள். ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி, பயறையும் எல்லா நறுமணப் பொருட்களையும் சேர்த்து மிதமான வெப்பத்தில் 2 நிமிடம் சமைக்கவும். மத்தைக்கொண்டு அந்தக் கலவையை லேசாக நசுக்கிவிடவும்.
- சமைக்கப்படாத சல்சாவைத் தயாரிக்க, வெங்காயம், தக்காளி, எலுமிச்சைச் சாறு, உப்பு, கரு மிளகு, மிளகாய்ப் பொடி ஆகியவற்றைச் சேர்க்கவும். கரண்டியின் பின்புறத்தைப் பயன்படுத்தி எல்லா உட்பொருட்களையும் கலந்து நசுக்கவும்.
- பர்ரிட்டோ பவுலைத் தயாரிப்பதற்கு, தட்டைப் பயறு, சமைத்த அமராந்த், புளித்த பாலாடை மற்றும் சல்சாவை 4 சம பாகங்களாக பிரிக்கவும். பரிமாறும்போது முதலில் அமராந்த்தை வைத்து, அதன்மீது தட்டைப் பயறை வைத்து அதன்மீது சல்சா மற்றும் புளித்த பாலாடையை வைக்கவும். இதை மீண்டும் செய்து சூடாகப் பரிமாறவும்.