உகந்த முடிவுகளைப் பெறுவதற்கு உங்கள் மருத்துவர் அறிவுறுத்தியபடி இரத்த அழுத்த மருந்துகளை எடுத்துக்கொள்வது முக்கியமானதாகும். மருந்தைக் கடைப்பிடித்தல் என்பதில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை சரியான நேரத்தில், சரியான அளவில், பரிந்துரைக்கப்பட்ட காலத்திற்கு எடுத்துக்கொள்வதும் அடங்கும். நோயாளிகள் தங்கள் சிகிச்சைத் திட்டத்தைக் கடைப்பிடிக்கும்போது, இரத்த அழுத்தம் சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்படுகிறது, இதனால் இதய வாஸ்குலார் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் குறைந்து, அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.
நன்மைகள் இருந்தபோதிலும், மருந்துகளைக் கடைப்பிடிப்பது என்பது குறிப்பிடத்தக்களவில் சவாலான விஷயமாகவே உள்ளது. சில நோயாளிகள் தாங்கள் வழக்கமான மாத்திரைகளை எடுத்துக்கொள்ள மறந்து விடலாம், மற்றவர்கள் பக்க விளைவுகள் அல்லது சிகிச்சை பற்றிய தவறான கருத்துக்கள் காரணமாக வேண்டுமென்ற மருந்துகளைத் தவிர்க்கலாம். மேலும், மருந்தைக் கடைப்பிடிக்கத் தவறுவதால் ஏற்படும் சாத்தியமான விளைவுகளைப் பற்றிய புரிதலின்மையால் கடுமையான உடல்நலச் சிக்கல்களும் ஏற்படக்கூடும்.
சிறந்த முறையில் மருந்துகளைக் கடைப்பிடிப்பதற்கான உத்திகள்:
- உங்கள் மருத்துவருடன் வழமையான தகவல் தொடர்பை வைத்துக்கொள்ளவும்
- மாத்திரை ஒழுங்குப்படுத்திகள் மற்றும் நினைவூட்டிகளைப் பயன்படுத்தவும்
- மருந்துகளை எடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளவும்
- நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து உதவி பெறவும்
ஆரோக்கியமான இதயத்திற்கான பயணம் மருந்துகளைக் கடைப்பிடிப்பதற்கான உங்கள் அர்ப்பணிப்பில் தொடங்குகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
ஆதாரங்கள்:
- National Heart, Lung, and Blood Institute. Managing Blood Pressure with Lifestyle Changes. https://www.nhlbi.nih.gov/health-topics/managing-blood-pressure
- Chowdhury, R., Khan, H., Heydon, E., Shroufi, A., Fahimi, S., Moore, C., … & Franco, O. H. (2013). Adherence to cardiovascular therapy: a meta-analysis of prevalence and clinical consequences. European heart journal, 34(38), 2940-2948. doi: 10.1093/eurheartj/eht295