குவாக்காமோலுடன் வேகவைத்த முட்டைகள்
உட்பொருட்கள்:
- வெண்ணெய் பழம்(Avocado) - ½ துண்டு
- வெங்காயம் [துண்டுகளாக நறுக்கப்பட்டது] - 50 கி
- தக்காளி [பாதியாக வெட்டப்பட்டது] - 50 கி
- குடை மிளகாய் [பொடியாக நறுக்கப்பட்டது] – 50 கி
- முட்டை வெள்ளைக்கரு [வேக வைத்தது] - 2 எண்ணிக்கை(30கி)
- உப்பு – சுவைக்கேற்ப
- மிளகு – சுவைக்கேற்ப
- ஜலபெனோ– சிறு துண்டுகளாக நறுக்கப்பட்டது (20கி)
- துளசி இலைகள் [பொடியாக நறுக்கப்பட்டது] - 1 தேக்கரண்டி
ஊட்ட மதிப்பு:
கலோரிகள் - 92.5 கி கலோரி
புரதம் – 6.4கி
முறை:
- முட்டைகளை 10 நிமிடங்கள் வேகவைக்கவும். மஞ்சள்கருவை எடுத்து தனியாக வைக்கவும்.
- வெண்ணெய் பழத்தை பாதியாக நறுக்கி, விதையை அகற்றவும். வெண்ணெய் பழத்தின் சதைப்பகுதியை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும், நறுக்கிய வெங்காயம், தக்காளி, ஜலபெனோஸ், உப்பு மிளகு சேர்த்து, எலுமிச்சை சாற்றைப் பிழியவும். வெண்ணெய் பழத்தை பிசைந்து, பொருட்கள் நங்கு கலக்கப்படும் வரை, ஒரு முட்கரண்டி கொண்டு கலக்கவும்.
- மஞ்சள்கரு பகுதியை குவாக்காமோல் டிப் மூலம் நிரப்பவும். துளசி இலைகளால் அலங்கரிக்கவும்.