Humrahi

சிக்கன் குயினோவா சாலட்

உட்பொருட்கள்:

  • கோழி நெஞ்சுப்பகுதி -50 கி
  •  குயினோவா –30கி
  • தக்காளி -1/2 எண்ணிக்கை (65 கி)
  • பச்சை குடைமிளகாய் -1/4 எண்ணிக்கை (30 கி)
  • வெங்காயம் - 3/4 கப் (150 கி)
  • எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
  • எலுமிச்சை சாறு -1 மேசைக்கரண்டி

ஊட்ட மதிப்பு:

கலோரிகள் - 260 கி கலோரி
புரதம் – 15.5கி

முறை:

  1. குயினோவாவை 3-4 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஒரு கடாயை எடுத்து, அதில் 2 கப் தண்ணீர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். குயினோவா சேர்த்து மென்மையாகும் வரை வேகவைக்கவும்.
  3. 15-20 நிமிடங்களுக்கு கோழியை பிரஷர் குக்கரில் சமைக்கவும். மூடியை அகற்றி சிறிது நேரம் ஆறவிடவும்.
  4. இதற்கிடையில், குறிப்பிட்டுள்ள அனைத்து காய்கறிகளையும் நறுக்கவும்.
  5. அனைத்தையும் ஒன்றாக சேர்க்கவும் - ஒரு கிண்ணத்தில் குயினோவா, சிக்கன் மற்றும் நறுக்கிய காய்கறிகளை ஒன்றாக கலந்து, சுவைக்கு ஏற்ப உப்பு, மிளகுத்தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
  6. கொத்தமல்லித்தழை கொண்டு அலங்கரிக்கவும்.

You might also like