Humrahi

Diabetes & Exercise

உடற்பயிற்சி என்பது நீரிழிவு கட்டுப்பாட்டில் ஒரு முக்கிய அம்சமாகும், இதனால் இரத்த சர்க்கரை அளவை மேம்படும், உடல் திடமாக இருக்கும், உடல் எடை சரியான அளவில் இருக்கும் மற்றும் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையும். இப்படிப் பல நன்மைகள் கிடைக்கும். இது இன்சுலின் ஏற்பை அதிகரித்து ஒட்டுமொத்த நலனையும் மேம்படுத்தும்.

நடனமோ, நீந்துவதோ, நடப்பதோ, அல்லது வேலை செய்வதோ உங்களை இயங்கச் செய்யும் எந்த ஒரு உடற் செயல்பாடுமே உடற்பயிற்சியாகக் கருதப்படுலாம். உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் எந்த ஒரு செயல்பாட்டையும் தேர்ந்தெடுங்கள். உகந்த ஆரோக்கிய நலன்களைப் பெற, வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது சுறுசுறுப்பான நடைபயிற்சி, நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற மிதமான தீவிரமான செயல்பாடுகளை மேற்கொள்ளுங்கள்.

அமெரிக்க நீரிழிவு சங்கம் வாரத்தில் குறைந்தது 5 நாட்களாவது 30 நிமிட மிதமான முதல் தீவிர ஏரோபிக் உடற்பயிற்சியை பரிந்துரைக்கிறது. உங்களுடைய செயல்பாடுகளை 3 நாட்களுக்குப் பிரித்துக்கொள்ளலாம். உடற்பயிற்சி இல்லாமல் தொடர்ந்து 2 நாட்களுக்கு மேல் இருப்பதைத் தவிர்க்கலாம். நடைபயிற்சி என்பது எளிமையான மற்றும் திறன்மிக்க ஒரு உடற்பயிற்சி என்பதால் அன்றாட வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

தண்ணீர் அருந்துங்கள், சரியான காலணிகளை அணிந்துகொள்ளுங்கள், பாதங்களை உலர்வாக வைத்துக்கொள்ளுங்கள், உடற்பயிற்சியின்போது ஹைப்போகிளைசீமியா பற்றி நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்னர், உங்களுடைய இரத்தச் சர்க்கரை அளவைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். உடற்பயிற்சிக்கு முந்தைய இரத்தச் சர்க்கரை அளவு 100 mg/dL (5.6 mmol/L) என இருந்தால் சிறிதளவு கார்போஹைட்ரேட் சிற்றுண்டி தேவைப்படும்.

100 முதல் 250 mg/dL-வரை (5.6 முதல் 13.9 mmol/L) என்ற அளவில் இரத்தச் சர்க்கரை அளவு இருந்தால் பொதுவாகப் பாதுகாப்பானது. 250 mg/dL (13.9 mmol/L)-க்கு மேல் இருந்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கீடோன் பரிசோதனை அவசியமாகலாம். உங்களுடைய இரத்தச் சர்க்கரை அளவு 70 mg/dL (3.9 mmol/L)-க்குக் குறைவாக இருந்தாலோ அல்லது குறைந்த இரத்தச் சர்க்கரை அளவு அறிகுறிகளை உணர்ந்தாலோ உடற்பயிற்சி செய்வதை நிறுத்துங்கள்.

உடற்பயிற்சி முடிந்ததும் இரத்தச் சர்க்கரை அளவை மீண்டும் சரிபார்க்க வேண்டும். அடுத்த சில மணி நேரத்திற்கும் பல முறை பரிசோதிக்க வேண்டும். உடற்பயிற்சி முடிந்து நான்கு முதல் எட்டு மணி நேரம் கழித்தும் இரத்தச் சர்க்கரை அளவு குறைய வாய்ப்புண்டு. உங்களுடைய உடற்பயிற்சிக்குப் பின்னர் மெதுவாகச் செயல்பம் கார்போஹைட்ரேட்டு எடுத்துக்கொண்டால் உங்களுடைய இரத்தச் சர்க்கரை அளவு குறைவது தடுக்கப்படும்.

உங்களுடைய நீரழிவு நோய் நிர்வாகம் தொடர்பாக உங்களுடைய உடற்பயிற்சித் திட்டம் பற்றிப் பேசுவதற்கு உங்களுடைய மருத்துவரிடம் பேசுங்கள்.14,15