பல்வேறு காரணிகள் காரணமாக நாள் முழுவதும் இரத்தச் சர்க்கரை (குளுக்கோஸ்) அளவு இயல்பாகவே ஏற்றஇறக்கம் ஏற்படும். சிறு மாற்றங்கள் இயல்பானவை என்பதால் கண்டுகொள்ளப்படாதிருக்கலாம் என்றாலும், அபாயகரமான அளவு குறை சர்க்கரை அளவுகள் கடுமையான பிரச்சனையாகும். ஆரோக்கியமான அளவிற்கும் கீழே இரத்தச் சர்க்கரை அளவு குறையும்போது, அது ஹைப்போகிளைசீமியா என அறியப்படுகிறது. வழக்கமான அளவிற்குத் திருப்பிக் கொண்டுவருவதற்கு உடனடி நடவடிக்கை தேவை.
ஹைப்போகிளைசீமியா என்பது இன்சுலினை எடுத்துக்கொள்ளும் அல்லது குறிப்பிட்ட வாய்வழி நீரிழிவு நோய் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் நீரழிவு நோயாளிகளுக்குப் பொதுவாக ஏற்படுகிறது. வழக்கத்திற்கு மாறான குறை இரத்தச் சர்க்கரை அளவுகள் காரணமாக உடல் சரியாகச் செயல்படும் இயல்பு பாதிக்கப்படுகிறது. நீங்கள் இன்சுலின் அல்லது நீரிழிவு மருந்தைப் பயன்படுத்தினால் மற்றும் இரத்தச் சர்க்கரைக் குறைவின் அறிகுறிகளான நடுக்கம், தலைச்சுற்றல், வியர்த்தல் அல்லது பசி போன்றவற்றை அனுபவித்தால், குளுக்கோஸ் மீட்டரைப் பயன்படுத்தி உங்கள் இரத்த சர்க்கரை அளவைப் பரிசோதிப்பது அவசியம். குறை இரத்தச் சர்க்கரை அளவு (70 mg/dL-க்குக் கீழ்) இருப்பதாக பரிசோதனை முடிவு காட்டினால், சரிய நடவடிக்கையை எடுங்கள்.
ஹைப்போகிளைசீமியாவின் ஆரம்ப அறிகுறிகள் உடனடியாக கவனிக்கப்பட வேண்டும். வீட்டில் குளுக்கோஸ் மாத்திரைகள், சர்க்கரை மிட்டாய்கள், ஜெல் மிட்டாய்கள், பழச்சாறு அல்லது தேன் போன்ற 15 கிராம் கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வது, இரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்த உதவும். நினைவு நிலை பாதிக்கப்படும் அளவுக்கு கடுமையாக இருந்தால், உடனடியாக மருத்துவக் கவனிப்பினைத் தேட வேண்டும். ஊசி அல்லது நரம்புவழி திரவங்கள் வழியாக குளுக்கோஸ் அளிக்கப்படலாம்.
ஹைப்போகிளைசீமியாவிற்கான பொதுவான காரணங்களில் அதிகப்படியான இன்சுலின் அல்லது நீரிழிவு மருந்து, குறைவான உணவு, சாப்பிடுவதற்குத் தாமதமாவது அல்லது சாப்பிடாதிருப்பது, மருந்து அல்லது உணவின் அளவில் மாற்றமின்றி அதிகப்படியான உடற்பயிற்சி மற்றும் ஆல்கஹால் போன்றவை அடங்கும். ஹைப்போகிளைசீமியா மூளையைப் பாதிக்கலாம், இதனால் குழப்பம், கவனம் செலுத்துவதில் சிரமம், எரிச்சல், தலைவலி, மற்றும் காட்சிக் கோளாறுகள் ஏற்படலாம்.
இரத்தச் சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிப்பது முக்கியம், தொடர்ந்து உணவு மற்றும் தீணிக்கான அட்டவணையைக் கடைபிடிப்பது, பரிந்துரைக்கப்பட்டபடி மருந்துகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சியில் ஈடுபடும்போது மருந்தைக் குறைத்துக்கொள்வது அல்லது தீணியை அதிகரித்துக்கொள்வது, குறை குளுக்கோஸ் எதிர்விணைகளின் பதிவை வைத்திருப்பது, அவசர சூழல்களுக்காக நீரழிவு நோய் அடையாளத்தை வைத்திருப்பது ஆகியவை ஹைப்போகிளைசீமியாவைத் தடுப்பதற்கு முக்கியம்.
இந்தத் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமும் இரத்தச் சர்க்கரை அளவுகளின்மீது கவமான கட்டுப்பாட்டைப் பேணுவதன் மூலமும், நீரிழிவுநோய் உள்ள தனிநபர்கள் ஹைப்போகிளைசீமியா அபாயத்தையும், அதனோடு தொடர்புடைய சிக்கல்களையும் குறைக்க முடியும்.16,17