Humrahi

நீரிழிவு நோயில் தொழில்நுட்பம்

நீரிழிவு நிர்வாகத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் சிகிச்சை மற்றும் நிலைமையைக் கண்காணிப்பதில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன, இன்சுலின் அளிப்பதில் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குவதோடு நீரிழிவு நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான திறனையும் வழங்குகின்றன. இன்சுலின் தேவைப்படும் 2-ஆம் வகை நீரழிவு நோயாளிகளுக்கு, இந்தத் தொழில்நுட்பங்கள் தங்களுடைய நிலையை சிறப்பாக நிர்வகிக்க மதிப்புமிக்க வழிகளை அளிக்கின்றன.s

குறிப்பாக இன்சுலினை எடுக்கும் நபர்களுக்கு, ஒரு அத்தியாவசியமான கருவியாக இரத்த குளுக்கோஸ் மீட்டர் உள்ளது. ஒரு நாளில் பலமுறை இரத்தச் சர்க்கரை அளவை அளவிடுவதன் மூலம், இன்சுலின் டோசின் திறனைத் தீர்மானிக்க இந்த மீட்டர் உதவுகிறது. தேவைப்பட்டால் அதைச் சரிசெய்யவும் உதவுகிறது. சில மீட்டர்களினால் முடிவுகளை ஒரு கணினிக்குப் பதிவிறக்கம் செய்ய முடியும், இதன் மூலம் மருத்துவர்கள் கண்காணித்து மருந்துகளைக் கூட்ட குறைக்க முடியும்.

தொடர்ச்சியான இரத்தச் சர்க்கரை மானிட்டர்கள் அதிக ஆட்டோமேட்டட் அணுகுமுறையை அளிக்கின்றன. இந்தக் கருவிகள் பகல் இரவு என எல்லா நேரமும் தோலின்கீழ் வைக்கப்பட்டுள்ள ஒரு சிறு சென்சாரைப் பயன்படுத்தி இரத்தச் சர்க்கரை அளவுகளை அளக்கின்றன. தரவு ஒரு பெறுநர் அல்லது பம்ப்-க்கு அனுப்பப்படுவதால், சிகிச்சை பற்றிய ஒரு ஒருங்கிணைந்த கண்ணோட்டத்தை அளிப்பதோடு சிகிச்சையை சிறப்பாக்கவும் உதவுகிறது. குறிப்பாக, 1-ஆம் வகை நீரழிவு நோய் உள்ள நோயாளிகளுக்குக் உதவினாலும், 2-ஆம் வகை நீரழிவு நோயாளிகளுக்கு அதன் பலன் உறுதியாக இல்லை.

கன்டினுவஸ் குளுக்கோஸ் மானிட்டரிங் (CGM) என்றும் அறியப்படும் ஸ்டிக்-ஃபிரீ குளுக்கோஸ் பரிசோதனை என்பது அடிக்கடி விரலில் ஊசி குத்துவதற்கு மாற்றாக இருக்கும். CGM இரத்த சர்க்கரை அளவை அளவிடுவதற்கு தோலின் கீழ் செருகப்பட்ட ஒரு சிறிய சென்சாரைப் பயன்படுத்துகிறது, வயர்லெஸ் முறையில் முடிவுகளை பம்ப் அல்லது ஸ்மார்ட்போன் போன்ற சாதனத்திற்கு அனுப்புகிறது.

இன்சுலின் பேனாக்கள் ஊசிகளுக்கு மாற்றான ஒரு வசதியான வழியாக உள்ளது. இந்தப் பேனா போன்ற கருவிகள் இன்சுலின் ஏற்றப்பட்டு வருகின்றன அல்லது மாற்றத்தக்க கேட்ரிட்ஜ்களைப் பயன்படுத்துகின்றன. இன்சுலின் அலகுகள் முன் தீர்மானிக்கப்பட்டவை. இன்சுலினை விரைவாகவும் சுலபமாகவும் அளிப்பதற்கு தோலிற்குள் ஊசி செருகப்படுகிறது. நாள் முழுவதும் பல இன்சுலின் மருந்தளவுகள் தேவைப்படும் நபர்களுக்கு இன்சுலின் பம்புகள் உகந்தவை. இந்தப் பாக்கெட் சைஸ் கருவிகள் ஒரு மெல்லிய டியூப் மற்றும் தேலுக்கு அடியில் செருகப்படும் ஊசி வழியாக இன்சுலினை அளிக்கின்றன. பம்பினால் அடிப்படையான இன்சுலினை நாள் முழுவதும் அளிக்க முடிவதோடு, தேவைப்படும் போனஸ் மருந்தளவையும் கொடுக்க முடியும்.

நாள் முழுவதும் பல இன்சுலின் மருந்தளவுகள் தேவைப்படும் நபர்களுக்கு இன்சுலின் பம்புகள் உகந்தவை. இந்தப் பாக்கெட் சைஸ் கருவிகள் ஒரு மெல்லிய டியூப் மற்றும் தேலுக்கு அடியில் செருகப்படும் ஊசி வழியாக இன்சுலினை அளிக்கின்றன. பம்பினால் அடிப்படையான இன்சுலினை நாள் முழுவதும் அளிக்க முடிவதோடு, தேவைப்படும் போனஸ் மருந்தளவையும் கொடுக்க முடியும்.

ஜெட் இன்ஜெக்டர்கள் தோல் வழியாக இன்சுலினை அளிப்பதற்கு உயர் அழுத்த காற்றைப் பயன்படுத்தி இன்சுலினை அளிக்கின்றன. ஆயினும், ஊசிகள் அல்லது பேனாக்களுடன் ஒப்பிடும்போது இந்தக் கருவிகள் அதிக விலையுடையதாகவும், பயன்படுத்த சிக்கலானதாகவும் இருக்கலாம்.

ஒவ்வொரு சாதனத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளைப் புரிந்துகொள்வதற்கு இந்த பல்வேறு விருப்பங்களை சுகாதார வழங்குநர்கள் மற்றும் நீரிழிவு கல்வியாளர்களுடன் விவாதிப்பது முக்கியம். யதார்த்தமான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட தொழல்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு அதை கடைபிடிக்க ஊக்கம் பெறுவதுதான் வெற்றிகரமான நீரழிவு நோய் மேலாண்மைக்கு முக்கியம். இறுதியாக, நீரழிவு நோய் தொழில்நுட்பத்தில் உள்ள இந்த முன்னேற்றங்கள், நெகிழ்வுத்தன்மையையும், குளுக்கோஸ் கட்டுப்பாட்டையும் சர்க்கரை நோயுடன் உள்ள தனிநபர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் நோக்கம் கொண்டவை.18,1918,19