Humrahi

நீரிழிவு நரம்பு நோய்

நீரிழிவு நரம்பியல் நோய் என்பது நீரிழிவு நோயின் பொதுவான மற்றும் பலவீனப்படுத்தும் சிக்கலாகும். இது பல்வேறு துன்பகரமான அறிகுறிகளுக்கு வழிவகுக்கும் ஒரு வகையான நரம்பு சேதமாகும். இதைச் சரியான முறையில் சமாளிக்காவிட்டால், கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். நீரிழிவு நரம்புநோய், அதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் மேலாண்மை உத்திகள் பற்றிய விரிவான புரிதலை வழங்குதுதான் இந்த வலைப்பதிவின் நோக்கம்.

இது நீரிழிவு நோயாளிகளின் உயர் இரத்த சர்க்கரை அளவு நீண்டகாலமாக கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதன் காரணமாக சிறிது சிறிதாக வளரும் நோய்தான் நீரிழிவு நரம்பியல் நோய். இது உடல் முழுவதும் பல்வேறு வகையான நரம்புகளை பாதிக்கிற ஒரு சிக்கலான கோளாறு. இதற்கு பல அறிகுறிகள் உள்ளன. நீரிழிவு நரம்பியல் வளர்ச்சிக்கு இரண்டு முதன்மை காரணிகள் பங்களிக்கின்றன: நீடித்த ஹைப்பர் கிளைசீமியா (உயர் இரத்த சர்க்கரை) மற்றும் அசாதாரண இரத்த கொழுப்பு அளவுகள். காலப்போக்கில், இந்த காரணிகள் நரம்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும், அவை சமிக்ஞைகளை சரியாக அனுப்பும் திறனை பாதிக்கின்றன.s

நீரிழிவு நரம்பு நோயின் காரணங்கள்

  1. நாட்பட்ட ஹைப்பர் கிளைசீமியா (இரத்தச் சர்க்கரை மிகை): நீரிழிவு நோயின் அடையாளமாக இருக்கும் உயர் இரத்த சர்க்கரை அளவுகள் நீரிழிவு நரம்பியல் நோய்க்கான முதன்மைக் காரணமாகும். நாள்பட்ட ஹைப்பர் கிளைசீமியா நரம்புகளுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்கும் இரத்த நாளங்களின் சுவர்களை சேதப்படுத்துகிறது. இந்தச் சேதம் காரணமாக நரம்புகளுக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைந்ததால், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இழந்து நரம்பு சேதம் ஏற்படுகிறது.
  2. அசாதாரண இரத்த கொழுப்பு அளவுகள்: உயர் இரத்த சர்க்கரைக்கு கூடுதலாக, நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் உயர் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் உட்பட இரத்தக் கொழுப்புகளின் அசாதாரண அளவைக் கொண்டுள்ளனர். இந்த அசாதாரண கொழுப்பு அளவுகள் நரம்பு சேதத்திற்கும் வழிவகுக்கும்.

நீரிழிவு நரம்பியல் நோயின் அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட நரம்புகளைப் பொறுத்து நீரிழிவு நரம்பியல் நோயின் அறிகுறிகளின் வகையும் தீவிரத்தன்மையும் மாறுபடும். பொதுவான நீரிழிவு நரம்பியல் வகைகளில் சில தரப்பட்டுள்ளன:s

  1. புற நரம்பியல் நோய்: இது நீரிழிவு நரம்பியல் நோயின் மிகவும் பொதுவான வடிவமாகும். இது பிரதானமாக கால்கள் மற்றும் கைகள் போன்ற புற உறுப்புகளை பாதிக்கிறது. உணர்வின்மை, கூச்ச உணர்வு, எரியும் உணர்வு மற்றும் வலி ஆகியவை அறிகுறிகளாக இருக்கலாம்.
  2. தன்னியக்க நரம்பியல் நோய் (அட்டானமிக் நியூரோபதி): இந்த வகை தன்னியக்க நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது, இது தன்னிச்சையான உடல் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. செரிமான பிரச்சனைகள், சிறுநீர் பிரச்சனைகள், இதய தாள கோளாறுகள் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.
  3. ப்ராக்ஸிமல் நியூரோபதி: பொதுவாக தொடைகள், இடுப்பு அல்லது பிட்டம் ஆகியவற்றை இந்த வகை நரம்பியல்நோய் பாதிக்கிறது. தசை பலவீனம், வலி மற்றும் கடுமையான சூழல்களில் உடல் இயக்கத்திற்குச் சிரமத்தையும் ஏற்படுத்தும்.
  4. ஃபோக்கல் நியூரோபதி: ஃபோக்கல் நியூரோபதி குறிப்பிட்ட நரம்புகளில் திடீர் என்று பெரும்பாலும் கடுமையான வலியை ஏற்படுத்துகிறது. இது தலை, உடற்பகுதி அல்லது கால்களை பாதிக்கலாம். இதன் காரணமாக கண்ணின் பார்வையைக் கூர்மைப்படுத்துவதில் சிரமம், இரட்டை பார்வை மற்றும் பிற மோசமான அறிகுறிகள் ஏற்படும்.

நீரிழிவு நரம்பியல் நோய் மேலாண்மை

நீரிழிவு நரம்பியல் நோய் மேலாண்மை என்பது அதன் அறிகுறிகளைத் தணிக்கவும், நிலையின் முன்னேற்றத்தைக் குறைக்கவும், ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அவசியமாகிறது. நீரிழிவு நரம்பியல் நோய் மேலாண்மைக்கான பல உத்திகள் கீழே தரப்பட்டுள்ளன:

  1. இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல்: நீரிழிவு நரம்பியல் நோயை நிர்வகிப்பதற்கான முதன்மையான அணுகுமுறை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் சீராகப் பராமரிப்பதே. இரத்த குளுக்கோஸ் அளவை தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் நீரிழிவு மேலாண்மை திட்டத்தை கடைபிடிப்பது போன்றவை மேலும் நரம்பில் ஏற்படும் சேதத்தை தடுக்க உதவும்.
  2. வலி மேலாண்மை: மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் நீரிழிவு நரம்பியல் நோயுடன் தொடர்புடைய வலியை சமாளிக்க உதவும். இவற்றில் மருந்துக்கடையில் தாங்களே வாங்கும் மருந்துகள் அல்லது பரிந்துரைக்கப்பட்ட வலி நிவாரணிகள், மேற்பூச்சு சிகிச்சைகள் மற்றும் ஆன்டிகன்வல்சன்ட்ஸ் அல்லது ஆண்டிடிப்ரஸண்ட்ஸ் ஆகியவை அடங்கும்.
  3. உடல் சிகிச்சை: உடல் சிகிச்சையானது நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட நபர்களின் தசை வலிமை மற்றும் இயக்கத்தை மேம்படுத்துகிறது, கீழே விழுந்து காயம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
  4. பாத பராமரிப்பு: நீரிழிவு நரம்பியல் நோயில் பாத சிக்கல்கள் பொதுவானவை. தினசரி பரிசோதனை, ஈரப்பதமாக்குதல் மற்றும் வசதியான, நன்கு பொருந்தும் காலணிகளை அணிவது உட்பட தொடர் பாத பராமரிப்பு, புண்கள் மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்க முக்கியமானது.
  5. வாழ்க்கை முறை மாற்றங்கள்: ஆரோக்கியமான உணவுமுறை, வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுதல் மற்றும் புகைபிடிப்பதை நிறுத்துதல் போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்கள் அனைத்தும் நீரிழிவு நரம்பியல் நோயின்மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
  6. மாற்று சிகிச்சைகள்: அக்குபங்சர், பயோஃபீட்பேக் அல்லது மசாஜ் போன்ற மாற்று சிகிச்சைகள் மூலம் சிலர் நிவாரணம் பெறுகிறார்கள்.
  7. நரம்பியல் வலி நிவாரணம்: கேப்சைசின் கிரீம் போன்ற சில மேற்பூச்சு சிகிச்சைகள் நரம்பியல் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கலாம்.

முடிவுரை:

நீரிழிவு நரம்பியல் நோய் என்பது ஒரு நபரின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை பாதிக்கிற நீரிழிவு நோயின் ஒரு சவாலான சிக்கலாகும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பொறுத்தவரை அதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் மேலாண்மை உத்திகளைப் புரிந்துகொள்வது அவசியம். நீரிழிவு நரம்பியல் நோய் மேலாண்மை என்பது முக்கியமாக இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, வலி மேலாண்மை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவற்றைச் சார்ந்தது. நீரிழிவு சிகிச்சைக்கான விரிவான அணுகுமுறையை பின்பற்றுவதன் மூலமும், நரம்பியல் அறிகுறிகளை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலமும், தனிநபர்கள் இந்த நிலையின் தாக்கத்தை தங்கள் வாழ்க்கையில் குறைக்கலாம்.46,4746,47