Humrahi

குட்டு ஆட்டா பன்னீர் மசாலா தோசை

உட்பொருட்கள்:

  • குட்டு ஆட்டா (பசையம் இல்லாத பக்வீட் மாவு)– 2 கப் 
  • தயிர் - ½ கப்
  • குதிரைவாலி அரசி - 2 கப் 
  • 2 வேகவைத்த உருளைக்கிழங்கு 
  • ½ டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
  • 2 நறுக்கிய பச்சை மிளகாய் 
  • ½ டீஸ்பூன் மஞ்சள் தூள் 
  • ½ டீஸ்பூன் கொத்தமல்லி தூள் 
  • ½ டீஸ்பூன் கடுகு விதைகள்
  • சுவைக்கு ஏற்ப உப்பு (கல் உப்பை பயன்படுத்தவும்). 
  • 2 டீஸ்பூன் எண்ணெய்

ஊட்ட மதிப்பு:

ஆற்றல்: 210 கிலோ கலோரி
ப்ரோடீன்: 4 கிராம்

முறை:

உருளைக்கிழங்கு பன்னீர் ஃபில்லிங் அதாவது பூரணம் செய்வதற்கு:

  1. ஒரு வாணலியில் 1.5 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, அதில் கடுகு சேர்த்து, அது வெடித்தவுடன், மஞ்சள், உப்பு மற்றும் உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
  2. மஞ்சள், சிவப்பு மிளகாய் தூள், புதிய பச்சை மிளகாய், கொத்தமல்லி தூள் மற்றும் கடுகு சேர்கிற மாதிரி உருளைக்கிழங்கை கலக்கவும்.
  3. உருளைக்கிழங்கு நன்றாக வதங்கி பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் சமைக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு, துருவிய பன்னீர் மற்றும் நறுக்கிய கொத்தமல்லியை சேர்க்கவும். எல்லாம் சேர்ந்திருக்கும் வகையில் நன்றாக கலக்கவும்.

தோசை செய்ய:

  1. குதிரைவாலி அரிசியை 1-2 மணி நேரம் ஊற வைக்கவும். 
  2. ஹேண்ட் பிளெண்டரைப் பயன்படுத்தி, குட்டு (பசையம் இல்லாத பக்வீட் )மற்றும் குதிரைவாலி அரிசியை ஒன்றாக அரைக்கவும்.
  3. யோகர்ட், தண்ணீர், உப்பு மற்றும் குட்டு ஆட்டா (பசையம் இல்லாத பக்வீட் மாவு) மற்றும் குதிரைவாலி அரிசியை சேர்த்து மென்மையான மாவை தயாரிக்கவும், மாவு சற்று கெட்டியாக இருக்க வேண்டும். அதை அப்படி ஒரு பக்கம் வைக்கவும்.
  4. ஒரு பெரிய நான்-ஸ்டிக் வாணலியில் ½ டீஸ்பூன் எண்ணெயை ஒரு நிமிடத்திற்கு சூடாக்கவும்.
  5. தோசை வடிவில் சுமார் 2 கரண்டி மாவை ஊற்றி சுழற்றி பரத்தவும்
  6. குறைந்த தீயில் சுமார் 2 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
  7. லேசாக, தோசையை மற்றொரு பக்கம் திருப்பி மற்றொரு 2 நிமிடங்களுக்கு சமைக்கவும். 
  8. சரியாக வெந்ததும் உருளைக்கிழங்கு மற்றும் பன்னீர் பூரணத்தை மையத்தில் வைத்து தோசையை மடியுங்கள். 
  9. சூடாக பரிமாறவும்.

நீங்கள் விரும்பலாம்