நீரழிவு நோய் மனநலனை எப்படிப் பாதிக்கிறது?
உங்களுடைய நீரழிவு நோய் பராமரிப்புத் திட்டத்தைக் கடைபிடிப்பதன்மீது மன நலன் சவால்கள் தடை ஏற்படுத்தலாம். உடலின் அமைப்புகளின் சரியான செயல்பாட்டின்மீது எண்ணங்களும், உணர்ச்சிகளும், நம்பிக்கைகளும் மனப்பான்மைகளும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். சிகிச்சையளிக்கப்படாத, மற்றும் மனநலப் பிரச்சனைகள் நீரழிவு நோயை அதிகரிக்கலாம், அதேபோன்று, நீரழிவு நோய் பிரச்சனைகள் மனநலப் பிரச்சனைகளை மோசமாக்கலாம்.
மனச்சோர்வு என்பது ஒரு மருத்துவ நிலையாகும், இது தொடர்ச்சியான சோக உணர்வுகள் மற்றும் ஒருகாலத்தில் மகிழ்ச்சியான செயல்களில் இருந்த ஆர்வம் குறைதல் போன்றவை என வகைப்படுத்தப்படுகிறது. உங்களுடைய நீரிழிவு மேலாண்மை உட்பட உங்களுடைய தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் திறம்பட செயல்படும் உங்கள் திறனை இது தடுக்கலாம். நீரிழிவு நோய் சரியாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், இதய நோய் மற்றும் நரம்பு பாதிப்பு போன்ற சிக்கல்களின் ஆபத்து அதிகரிக்கிறது. நீரழிவு நோய் இல்லாதவர்களைவிட நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு 2 முதல் 3 மடங்கு அளவுக்கு மனச்சோர்வினை அனுபவிப்பார்கள். சிகிச்சை மற்றும் மருந்து ஆகியவை உண்மையில் அதிக திறன்மிக்கவையாக உள்ளன. சிகிச்சை இல்லாவிட்டால், மனச்சோர்வு குறையாமல் மோசமடைந்துவிடும்.
மனச்சோர்வு அறிகுறிகளின் தீவிரம் மாறுபடலாம். அவற்றில் அடங்குவன:
- கவலை அல்லது வெறுமை உணர்வு அனுபவம்
- முன்னர் விரும்பிச் செய்த செயல்பாடுகளின்மீது ஆர்வம் குறைவது
- அதிகமாகச் சாப்பிடுவது அல்லது உணவின்மீது விருப்பமின்மை
- தூக்கமின்மை அல்லது அதிக தூக்கம் உட்பட, சீர்குலைந்த தூக்க முறைகள்
- கவனம் செலுத்துவது அல்லது முடிவெடுப்பதில் சிரமம்
- சோர்வு
- நம்பிக்கையின்மை, எரிச்சல், பதட்டம் அல்லது குற்ற உணர்வு போன்ற உணர்வுகள்
- கடுப்புகள், வலிகள், தலைவலி, பிடிப்புகள் அல்லது செரிமான பிரச்சனைகள் போன்ற உடல் அறிகுறிகள்
- தனக்கே தீங்கு செய்துகொள்ளும் அல்லது தற்கொலை செய்துகொள்ளும் எண்ணங்கள்
மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவை கருத்தில் கொள்ள வேண்டிய கூடுதல் மனநல அம்சங்களாகும். போக்குவரத்து நெரிசல், குடும்பத் தேவைகள் அல்லது நீரிழிவு பராமரிப்பின் அன்றாட நடைமுறைகள் போன்ற பல்வேறு விஷயங்களிலிருந்து எழும் மன அழுத்தம் என்பது வாழ்க்கையின் ஒரு உள்ளார்ந்த பகுதியாகும். மன அழுத்த ஹார்மோன்கள் இரத்த சர்க்கரை அளவுகளில் கணிக்க முடியாத ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுக்கலாம், மேலும் நீண்டகால மன அழுத்தம், குறிப்பாக நோய் அல்லது காயம் காரணமாக, இரத்த சர்க்கரை அளவை உயர்த்தலாம் மற்றும் பிற உடல்நல சிக்கல்களுக்கு பங்களிக்கலாம்.
பதட்டம் என்பது கவலை, பயம் அல்லது தொடர்ந்து நெருக்கடியில் இருக்கும் நிலை போன்ற உணர்வுகளை உள்ளடக்கியது, இது பெரும்பாலும் நீரிழிவு போன்ற நாட்பட்ட நிலையை சரிசெய்வதற்கான உடலின் அழைப்பாகும். நீரிழிவு நோயாளிகள் டயபடீஸ் டிஸ்ட்ரஸ் எனப்படும் ஒரு நிலையை அனுபவிக்கலாம், இது மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்றதாக இருக்கலாம். மனச்சோர்வு போலில்லாமல், டயபடீஸ் டிஸ்ட்ரஸ் என்பது ஹைப்போகிளைசீமியா அல்லது இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் ஆபத்து போன்ற நீரழிவு நோய் தொடர்பான காரணிகளோடு தொடர்பு படுத்த முடியும். குடும்ப மற்றும் சமூக ஆதரவு மற்றும் சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் போன்ற வெளிக் காரணிகளும் டயபடீஸ் டிஸ்ட்ரஸ்-ஐ பாதிக்கலாம். டயபடீஸ் டிஸ்ட்ரஸ்-க்கு சிகிச்சையளிக்க பொதுவாக மருந்துகள் பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும், நீரிழிவு பராமரிப்பினை மேம்படுத்துதல், பேச்சு சிகிச்சை மற்றும் ஆதரவு குழுக்கள் முதலியன மன அழுத்தத்தைக் குறைக்க உதவியாக இருக்கும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மனச்சோர்வு, மன அழுத்தம் அல்லது பதட்டத்தை அனுபவிப்பதாக நீங்கள் சந்தேகித்தால், தேவையான சிகிச்சையைத் தொடங்க உங்களுடைய மருத்துவரை உடனடியாக அணுகுவது மிகவும் முக்கியம். மனச்சோர்வு விஷயத்தில் ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறுவது குறிப்பாக உங்களுடைய ஒட்டுமொத்த நல்வாழ்வு, வாழ்க்கைத் தரம் மற்றும் பயனுள்ள நீரிழிவு மேலாண்மைக்கு உதவும்.31,32


