வெஜ் பிரியானி
உட்பொருட்கள்:
- 2 தேக்கரண்டி சூரியகாந்தி எண்ணெய்
பெரிய வெங்காயம், நறுக்கியது - 300 கி. கொண்டைக் கடலை, சுச்சினி, துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்
- "1 மிலி மிளகு, நறுக்கியது கேரட், சீவியது"
- 8 காளான்கள், துண்டாக்கப்பட்டது
- 1 கத்தரிக்காய், துண்டுகளாக வெட்டப்பட்டது
- 1 தேக்கரண்டி கறிமசாலா (மைல்டு, மீடியம் அல்லது ஹாட்)
- 1 மேசைக்கரண்டி கிஷ்மிஷ்
- 300 கி. பாஸ்மதி அரிசி, குளிர்ந்த நீரில் அலசியது
- 8oo மிலி கொதி நீர்
- 100 கி. உறைந்த பட்டாணி, டி.ஃபிராஸ்ட் செய்யப்பட்டது
- "கைப்பிடியளவு மல்லி இலை, நறுக்கியது 1 மேசைக்கரண்டி எண்ணெய்"
ஊட்ட மதிப்பு:
ஆற்றல்: 482 கி.கலோரி
புரதம்: 27.6 கிராம்
முறை:
- சூரியகாந்தி எண்ணெயை ஒரு வானலியில் ஊற்றி வெங்காயத்தைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- கொண்டைக்கடலை, சுச்சினி, செம்மிளகு, கேரட், காளான் மற்றும் கத்தரிக்காயைச் சேர்த்து, இன்னும் 5 நிமிடம் கிளறிக்கொண்டே வேக விடவும்.
- கறிமசாலா மற்றும் கிஷ்மிஷ்-ஐ சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- அடுத்து, காய்கறிகளுடன் அரிசியையும சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- பின்னர் கொதிநீரை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- கொதிக்க விட்டு, பின்னர் நெருப்பைக் குறைக்கவும்.
- மூடி வைத்து சில நிமிடங்கள் வேக விடவும்.
- நெருப்பை அணைத்துவிட்டு, மூடியைத் திறக்காமல் 5 நிமிடங்கள் விடவும்.
- பட்டாணி, மல்லி இழை, ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை சேர்க்கவும். நன்றாகக் கலக்கிவிட்டு பரிமாறவும்.